ஆர்.கே நகர் தேர்தலில் இருந்து திமுகவின் வெற்றிப்பயணம் தொடரும் : 2ஜி வழக்கின் தீர்ப்பு குறித்து பொங்கலூர் பழனிசாமி கருத்து

கோவை, டிசம்பர் 21

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஆர்.கே நகர் தேர்தலில் இருந்து திமுகவின் வெற்றிப்பயணம் தொடரும் என முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, எம்பி கனிமொழி உள்பட குற்றம்சாட்டப்பட்ட 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள், தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், திமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் பழனிசாமி தனது கருத்து கூறியுள்ளார். 

அவர் கூறியதாவது, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பு காலதாமதமானது என்றாலும், வரவேற்கத்தக்கது. சில அதிகாரிகள் மற்றும் தலைவர்களின் சூழ்ச்சியினால், திமுகவிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இதன் தாக்கம் கடந்த தேர்தல்களில் திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த போதும், 2 கோடி திமுக தொண்டர்கள் கட்சிக்கு உறுதுணையாகவே இருந்தனர். 

தமிழக மக்களுக்கு பிடித்தமான திராவிட அமைப்பு என்றால் திமுக தான். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கினால் ஏற்பட்ட குழப்பத்தால், கடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுகவிற்கு வாக்கு அதிகரித்தது. தற்போது, திமுக மீதான அவப்பெயர் நீங்கியிருப்பதால், ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் இருந்து திமுகவின் வெற்றிப்பயணம் தொடரும். உள்ளாட்சித் தேர்தல் என இனி வரும் அனைத்துத் தேர்தலிலும் திமுக வெற்றி பெறும். இவ்வாறு கூறினார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...