ஜெயலலிதா மரணம் விவகாரம்: ராம்மோகன்ராவிடம் 4 மணி நேரம் விசாரணை

டிசம்பர் 21

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன்ராவிடம் நீதிபதி ஆறுமுகசாமி 4 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் ஒவ்வொருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. இதில், இதுவரை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அரசு மருத்துவர் பாலாஜி, அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர, முன்னாள் மருத்துவ கல்வி இயக்குநர் நிர்மலா, டீன் நாராயணபாபு, திமுக நிர்வாகி சரவணன் உள்ளிட்ட பலர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். அரசு மருத்துவர்கள் 8 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஜெ.தீபாவின் கணவர் மாதவன் 2 முறை விசாரணை ஆணையத்தில் ஆஜராகி சில விவரங்களை மனுவாக எழுதிக் கொடுத்திருந்தார். தீபாவின் அண்ணன் தீபக பல்வேறு தகவல்களை விசாரணை நீதிபதியிடம் கூறி உள்ளார். இவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டு காணொளியாக எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல, ஜெயலலிதாவுக்கு அரசு ஆலோசகராக இருந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சீலா பலகிருஷ்ணனுக்கும், முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன்ராவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே, சீலா பலகிருஷ்ணன் விசாரணை ஆணையம் முன்பு நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன்ராவ் விசாரணை ஆணையத்தின் முன் இன்று ஆஜரானார். அப்போது, நீதிபதி ஆறுமுகசாமி கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளித்தார். மருத்துவமனையில் ஜெயலலிதாவை தாங்கள் பார்த்தீர்களா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளைக் கேட்ட நீதிபதியிடம் ராம்மோகன் ராவ் விளக்கினார். தொடர்ந்து 4 மணி நேரத்துக்கும் மேலாக அவர் விளக்கமாகப் பதிலளித்தார். இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவடைந்தது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...