கோவையில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி : மாநகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

கோவை, டிசம்பர் 22

கோவையில் விஷவாயு தாக்கி தங்கப்பட்டறை தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்துத் தொழிற்சங்க அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 



ஆர்.எஸ்.புரம் பகுதியில் தங்கப்பட்டறை நடத்தி வருபவர் ரவிசங்கர். நேற்றிரவு நள்ளிரவு தங்கப்பட்டறையில் உள்ள கழிவு நீர்த் தொட்டியை சுத்தப்படுத்துமாறு ரவிசங்கர் தனது பட்டறை தொழிலாளர்களிடம் கூறியதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து அங்குப் பணிபுரிந்து வந்த சூர்யா, ஏழுமலை மற்றும் கவுரி சங்கர் ஆகிய மூன்று பேரும், சுத்தப்படுத்தும் பணிக்காக கழிவு நீர்த் தொட்டிக்குள் இறங்கினர். 

அப்போது, தொட்டியில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கியதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக தகவலறிந்த ஆர்.எஸ்.புரம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, 3 பேரின் உடலையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். 

மேலும், தலைமறைவாக உள்ள பட்டறை உரிமையாளர் ரவி சங்கர் மீது அஜாக்கிரதையாகச் செயல்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்துதல் என்ற வழக்கினை பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர். 

இந்த நிலையில், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்த 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக, மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தித் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் கட்சி, சமூக நீதிக்கட்சி உட்பட அனைத்துத் தொழிற்சங்க அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகையும், பலியானவர்களின் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத்துணைப் பொதுச்செயலாளர் யு.கே சிவஞானம், வெண்மணி, பன்னீர்செல்வம் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்த சுசிக்கலையரசன் ஆகியோர் இந்த மனுவை அளித்தனர். 

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊர்வலமாக வந்து மாவட்ட அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...