மிஸ்டர் ஆசியா ஆணழகன் போட்டியில் 2-ம் இடத்தைப் பிடித்து கோவை இளைஞர்கள் சாதனை

கோவை, டிசம்பர் 23

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற மிஸ்டர் ஆசியா ஆணழகன் போட்டியில் கோவையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் பங்கேற்று, வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.



ஆசியா பாடி பில்டிங் (body building) மற்றும் ஃபிட்னஸ் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த சர்வதேசப் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதி போட்டிகள் சென்னையில் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற கே.சி.டி பிசின்ஸ் ஸ்கூல் மாணவர் எம்.விக்னேஷ் என்ற விக் டிசல் (24) மற்றும் கோவையைச் சேர்ந்த ஆர். சுந்தரபாண்டியன் ஆகியோர் சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றனர். 

டிசம்பர் 17, 19-ம் தேதிகளில் பாங்காக்கில் நடைபெற்ற மிஸ்டர் ஆசியா சாம்பியன்ஷிப் போட்டியில், 60 கிலோ எடை பிரிவில் எம்.விக்னேஷும், 55 கிலோ எடை பிரிவில் ஆர்.சுந்தரபாண்டியனும் இரண்டாம் இடம்பெற்று வெள்ளி பதக்கத்தை வென்றனர். இந்தப் போட்டியில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியன் பாடி பில்டிங் தலைவர் ஹோமயோன் கோரான், பொதுச் செயலாளர் சுரேஷ் கடம், தமிழ்நாடு பாடி பில்டிங் அசோஷியன் பொதுச் செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் இவர்களுக்குப் பரிசுகளை வழங்கிக் கௌரவித்தனர்.



வெள்ளிப் பதக்கம் வென்ற விக்னேஷ், மிஸ்டர் கே.சி.டி, மிஸ்டர் கோயமுத்தூர், மிஸ்டர் தமிழ்நாடு, மிஸ்டர் தென்னிந்தியா ஆகிய பட்டங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து பதக்கம் வென்ற விக்னேஷ் மற்றும் சுந்தரபாண்டியன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது :- இந்தியாவின் சார்பில், குறிப்பாக தமிழகத்தில் இருந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்றது மிகவும் பெருமைக்குரிய வாய்ப்பாகவே கருதுகிறோம். பிற நாட்டு வீரர்களுடன் போட்டியில் கலந்து கொண்டது புதுமையான அனுபவத்தைக் கொடுத்தது. இந்தத் தருணத்தில், எங்களுக்கு உதவியாக இருந்த குடும்பத்தினர், ஆசிரியர்கள், நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். என்றனர். 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...