மருத்துவ செலவை ஏற்க மறுத்தத் தனியார் பேருந்து உரிமையாளரைக் கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்


கோவை, டிசம்பர் 23

கோவை அருகே மருத்துவ செலவை ஏற்க மறுத்தத் தனியார் பேருந்து உரிமையாளரைக் கண்டித்து பாதிக்கப்பட்ட பயணிகளின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கள்ளப்பாளையத்தில் இருந்து உக்கடம் நோக்கி தனியார் பேருந்து (எண் 37) காலை 6.30 மணிக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது, கேரளாவில் இருந்து எல்என்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக அவினாசி சாலையை சென்றடைவதற்காக லாரி ஒன்று வந்தது. அதிகாலை நேரம் என்பதால், சாலை விதிகளை மீறி ஓடிய அந்தப் பேருந்து, லாரியின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், பேருந்து ஓட்டுநரின் கால்கள் துண்டாகின. மேலும், பேருந்தில் பயணம் செய்த 20 பயணிகள் பலத்த காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.



உடனடியாக அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து, தனியார் பேருந்தின் உரிமையாளர் மருத்துவமனைக்கு வந்தார். அங்கு குவிந்திருந்த படுகாயமடைந்த பயணிகளின் உறவினர்கள், அவரை முற்றுகையிட்டு, மருத்துவ சிகிச்சைக்கான செலவை ஏற்றுக் கொள்ளுமாறு முறையிட்டனர். ஆனால், அதனைப் பேருந்து உரிமையாளர் ஏற்க மறுத்தால், இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.



இதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த படுகாயமடைந்த பயணிகளின் உறவினர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால், சிந்தாமணிபுதூர் பிரிவில் இருந்து சூலூர் வரையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த சூலூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உரிய நிவாரணம் பெற்றுத் தருவதாகப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...