தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம்

டிசம்பர் 23

திருப்பூர் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருப்பூரில், பிற மாநிலத்தைச் சேர்ந்த குழந்தைத் தொழிலாளர்களை கண்டறிந்து குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்கும்பணிகள் ஜீன் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாநகராட்சி நஞ்சப்பா நகரில் தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாற்றும் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குழந்தைகளின் கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சமுதாயக் கூடத்தில் 22.12.2017 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் யு.புளோரா தலைமை வகித்தார். 

நிகழ்ச்சியில், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் டி.வி.விஜயகுமார் பேசும் போது, திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த குழந்தைத் தொழிலாளர்கள் கல்வி கற்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகள் 31 பேர் கண்டறியப்பட்டு, அவர்களுக்குச் சிறப்பு பயிற்சி மையத்தின் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இக்குழந்தைகளுக்குத் தமிழக அரசின் மூலம் பாடப்புத்தகம், விளையாட்டு உபகரணங்கள், எழுதுபொருட்கள், மதிய உணவு, சீருடை, காலணி உள்ளிட்ட இலவச கற்றல் உபகரணங்கள் கல்வித்துறையின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

அதே போன்று, சமூக நலத்துறையின் சார்பில் முட்டையுடன் கூடிய மதிய உணவு வழங்கப்படுகிறது. வடமாநில குழந்தைத் தொழிலாளர்களுக்கு ஆதார் மையங்களில் புகைப்படம் எடுக்கப்பட்டு ஆதார் அட்டை பெற்றுத் தருவதோடு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவங்கி மாணவ, மாணவிகளின் வருகை 60 சதவீதம் இருக்கும்பட்சத்தில் மாதம் ரூ.400 ஊக்கத்தொகையாக சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வங்கி கணக்கிற்கு நேரடி பணபரிமாற்ற திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. 

மேலும், குழந்தைத் தொழிலாளர்களின் பெற்றோர்களை ஒருங்கிணைத்து மகளிர் சுய உதவிக் குழுக்கள் துவங்கி சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும் வழிகாட்டப்படுகிறது. குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத நிலையை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்குப் பெற்றோர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், தொழில் வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக, போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் யு.புளோரா பரிசுகள் வழங்கினார். முடிவில் பாரதியார் பல்கலைக்கழக சமூக பணிஇயல் துறை முதலாம் ஆண்டு மாணவர் மதன்குமார் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...