பனிச்சரிவில் சிக்கி பலியான ராணுவ வீரரின் உடலுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அஞ்சலி

கோவை, டிசம்பர் 23

ஜம்மு காஷ்மீர் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் கோவை விமான நிலையத்தில் இருந்து அவரது சொந்த ஊரான நாதிப்பட்டி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.



இந்திய ராணுவத்தில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் படை வீரராக பணியாற்றி வந்தவர் மூர்த்தி (33). திருமணமான இவருக்கு சுபிக்‌ஷன் (3) மெர்வின் (5) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

கடந்த 9-ம் தேதி ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மூர்த்தி அங்கு ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக மூர்த்தி-யின் உடலை மீட்பதில் தொய்வு ஏற்பட்டது. கடந்த 19-ம் தேதி அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

மூர்த்தியின் உடலை அவரது சொந்த ஊரான கரூரை அடுத்த நாதிப்பட்டி கிராமத்திற்கு கொண்டு செல்வதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு முப்படை வீரர்களும் அவரது உடலுக்கு மரியாதை செய்தனர்.



தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் உடல் சாலை மார்க்கமாக அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மூர்த்தியின் உடல் சாலை மார்க்கமாக அவரது ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை முழுவதும் வைக்கப்பட்டு, மாலை ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது" என்றார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...