முதலமைச்சராகத் துடிக்கும் நடிகர்களுக்கு கள் இறக்கும் இயக்கம் சவால்

கோவை, டிசம்பர் 25

முதலமைச்சராகத் துடிக்கும் நடிகர்கள், கள் இறக்கும் இயக்கத்துடன் வாதிட்டு தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி சவால் விடுத்துள்ளார்.

கோவையில் இன்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஓட்டுக்கு பணம் கொடுத்து பெறும் வெற்றி, வெற்றியே அல்ல. கள் இயக்கத்துடன் வாதிட்டு பெறும் வெற்றியே வெற்றி. தினகரனின் வெற்றி, தேர்தல் ஆணையத்திற்கு கிடைத்த தோல்வி. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் முதல் மூன்று இடங்களைக் பிடித்தவர்கள் ஒன்றிணைந்து, கள் இயக்கத்துடன் வாதிட்டு, கள் ஒரு தடை செய்யப்பட வேண்டிய போதைப்பொருள் தான் என நிரூபிக்க வேண்டும். இது முடியாமல் போனால் இந்த மூன்று தரப்பும் அரசியலுக்கு முழுக்குப் போடுவதே நாட்டுக்கு நல்லது. 

ஜனவரி 21-ஆம் தேதியன்று சொந்த தேவைக்காக கள் இறக்கிக் கொள்பவர்கள் இறக்கிக் கொள்ளலாம். அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தால், நீதிமன்றத்தை அணுகி சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். 

மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்விலும், இறப்பிலும் எழுந்திருக்கும் சர்ச்சைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் விசாரணை முடிக்கிவிடப்பட வேண்டும். 2ஜி வழக்கில் விடுதலையானவர்கள், சி.ஏ.ஜி மீது அவதூறு வழக்கு தொடர்ந்து சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக, முதலமைச்சராகத் துடித்துக்கொண்டிருக்கும் நடிகர்கள், கள் இயக்கத்தின் சவாலை ஏற்று வாதிட்டு தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...