தந்தையை இழந்த 251 பெண்களுக்கு ஒரே மேடையில் திருமணம்: மனிதநேயமிக்க தொழிலதிபரின் ஏற்பாடு

டிசம்பர் 25

குஜராத்தில் தந்தையை இழந்த 251 பெண்களுக்குத் தொழிலதிபர் ஒருவர் மிகவும் பிரமாண்டமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.

சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மகேஷ் சவானி என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக ஏழைப் பெண்களுக்கு சொந்த செலவில் திருமணம் நடத்தி வைத்து வருகிறார். இந்நிலையில் தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாகவும், தனது அந்த நற்செயலை அவர் தொடர்ந்துள்ளார். 6-வது ஆண்டான இந்த வருடத்தில் தந்தையை இழந்த 251 பெண்களுக்கு அவர் திருமணம் செய்து வைத்திருக்கிறார். திருமணம் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் தினத்தின் போது நடைபெற்று வருவதாகவும், திருமண ஜோடிகள் தங்கள் உடல் முழுவதும் வண்ணமயமான ஆபரணங்களை அணிந்து கொண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்தத் திருமணத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இந்தத் திருமணத்தை செய்து வைப்பதற்கு முக்கிய காரணம் கடந்த 2008-ஆம் ஆண்டு அவரது ஊழியர் ஒருவர், தனது மகள் திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் இறந்துவிட்டதாகவும், இதைக் கண்ட அவர் அதன்பின் இது தொடர்பாக தொண்டு நிறுவனத்தை நிறுவியதாகக் கூறப்படுகிறது.

இதில், இந்து மதத்தினர் மட்டுமின்றி கிறிஸ்தவர், இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்த பெண்களும் அடங்குவார்கள். 251 பெண்களில் ஒருவர் மாற்றுத்திறனாளி ஆவார். திருமணத்தை நடத்தி வைத்ததோடு மட்டுமின்றி ஒவ்வொரு பெண்ணுக்கு தலா 5 லட்சம் ரூபாய் செலவில் சீர்வரிசைகளையும் தொழிலதிபர் மகேஷ் சவானி வழங்கியுள்ளார். தந்தை இழந்து பணம் இல்லாமல் கஷ்டப்படும் பெண்களுக்குத் திருமணம் செய்துவைப்பதன் மூலம் தனக்கு மிகுந்த மனநிறைவு ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார். இந்தத் திருமணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திருமண ஜோடிகளை வாழ்த்தினர்.

இது குறித்து மகேஷ் சவானி கூறுகையில், இதை நான் ஒரு தந்தை பொறுப்பில் இருந்து எடுத்துக் கொள்கிறேன். ஒரு தந்தை என்ன எல்லாம் செய்ய முடியுமோ, அதை தான் செய்ய முயற்சி செய்கிறேன், இந்தியாவில் ஒரு மகள் தனது தந்தையை இழந்துவிட்டால், அவளது திருமணம் என்பது கேள்வி குறியாகிறது. அதற்காக, குடும்பத்தினர் பெரிதும் கஷ்டப்படுகின்றனர். இதை நான் தொடர்ந்து செய்வேன்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...