தமிழகத்தில் எந்த நேரத்திலும் மாற்றம் ஏற்படும்- தினகரன் ஆதரவாளர் புகழேந்தி

கோவை, டிசம்பர் 26

தமிழகத்தில் எந்த நேரத்திலும் மாற்றம் ஏற்படும் என்றும், அந்த மாற்றத்திற்காகத்தான் காத்திருப்பதாகவும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.



கோவை, குனியமுத்தூரில் எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், 

தமிழகத்தில் எந்த நேரமும் பெரிய மாறுதல் ஏற்படும். அந்த மாற்றத்திற்காகக் காத்திருக்கின்றோம். தேர்தல் வெற்றியை ஏற்றுக்கொள்கின்றோம் என திருமாவளவன் சொல்லி இருக்கின்றார். தேர்தல் வெற்றியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாமல் தமிழக அமைச்சர்கள் பேசுகின்றனர். 

போயஸ் கார்டன், கருணாநிதி இல்லம் என அனைவரின் வீட்டையும் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், நாம் யாரும் பார்த்திராத ஜெயக்குமாரின் வீடு மிகப்பெரிய மன்னர் மாளிகை போன்று இருக்கும். ஒரு தெருவில் ஆரம்பித்து மற்றொரு தெருவில் முடியும். இதை எப்படி அவர் சம்பாதித்தார். 

ஓரே ஒரு இடைத்தேர்தலில் ஜெயித்ததற்கு பைத்தியம் பிடித்தவர்களை போல அதிமுக அமைச்சர்கள் புலம்புகின்றனர். முதலமைச்சராக தினகரனை பார்க்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கீழ்த்தரமாகப் பேசுகின்றார். ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகியோரை மாலுமிகளாக கொண்ட கப்பல் மூழ்கி விட்டது. அதில் இருந்து ஓ.எஸ். மணியன் வெளியே வர வேண்டும்.

அமைச்சர் ஜெயக்குமார் அவரது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மதுசூதனனை எங்களிடம் அனுப்பட்டும். அதே தொகுதியில் எங்களால் மதுசூதனனை ஜெயிக்க வைக்க முடியும். அமைச்சர் ஜெயக்குமார் ஒரு அரசியல் அனாதை.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...