எக்ஸ்பிரஸ் ரயில்களில் கீழ்படுக்கை, ஜன்னலோர இருக்கைக்கு கூடுதல் கட்டணமா..!

டிசம்பர் 27

நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரயில்களில் கீழ்படுக்கை, ஜன்னலோர இருக்கைக்கு கூடுதலாக ரூ.50 கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது. 

ரயில்வேயின் வருவாயை அதிகரிப்பதற்காக மத்திய ரயில்வே இலாகா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு பயணிகளின் நெரிசலை சமாளிப்பதற்காக சுவிதா எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டது. பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலுக்கு ஏற்ப கட்டணங்களை நிர்ணயிக்கும் முறையை அப்போது கொண்டு வந்தனர். விடுமுறை காலங்களில் அதிகளவு மக்கள் வெளியூர்களுக்குச் செல்வார்கள் என்பதால் கட்டணத்தை அதற்கேற்ப உயர்த்தும் திட்டமும் நடைமுறையில் உள்ளது.

அதன்படி, முதல் 30 சதவீத டிக்கெட்டுகள் வழக்கமான கட்டணத்தில் வழங்கப்படுகிறது. அதன்பிறகு பயணிகளின் வருகைக்கேற்ப ஒவ்வொரு 10 சதவீத டிக்கெட்டும், அடுத்தடுத்த 10 சதவீத கட்டண உயர்வுடன் வசூலிக்கப்படுகிறது.

சுவிதா எக்ஸ்பிரஸ் ரயில்களில் கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதாகப் புகார் எழுந்துள்ளன. குறிப்பாக, முதல் வகுப்பு டிக்கெட் கட்டணம் சில சமயம் விமான கட்டணத்தையும் மிஞ்சும் அளவுக்கு இருப்பதாக பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இருப்பினும், மத்திய அரசு சுவிதா ரயில்களின் கட்டண உயர்வை இன்னமும் ஒழுங்குபடுத்தவில்லை.

இந்த நிலையில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் கட்டணத்தை உயர்த்த ரயில்வே இலாகா ஆலோசித்து வருகிறது. ரயில்களில் ஜன்னலோர இருக்கைக்கும், கீழ் படுக்கைக்கும் அதிகப் போட்டி காணப்படும். இந்தப் போட்டியை கருத்தில் கொண்டு ஜன்னலோர இருக்கைக்கும், கீழ்படுக்கைக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜன்னலோர இருக்கைகளுக்கு பயணிகள் கூடுதலாக ரூ.50 வரை அதிக கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும் எனத் தெரிகிறது. மத்திய பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...