கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி : குழந்தைகள் உட்பட 6 பேர் படுகாயம்

கோவை, டிசம்பர் 27

திருப்பூர் அருகே கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ளனர். 

கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (57). இவர் ரத்திஸ் (36) மற்றும் ரூபேஸ் (34) என்ற இருமகன்களின் குடும்பத்தினருடன் தஞ்சாவூரில் இருந்து கார் மூலமாக கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். 

இதே போல் கோவியில் இருந்து கரூர் சாலையை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை சபாபதி (48) என்பவர் இயக்கிவந்தார். 

அந்த கார் வெள்ள கோவிலை அடுத்த ஓலப்பாளையம் என்ற பகுதி அருகே சென்ற போது நிலை தடுமாறி எதிரே வந்த லார் மீது மோதியது. 

இந்த விபத்தில் காரில் பயணித்த லட்சுமி (57), ரத்தீஸ் (36) சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சபாபதி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இது குறித்து தகவலறிந்த ஓலப்பாளையம் போலீசார் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரூபேஸ் (34) அவரது மனைவி சுமதி (32), குழந்தைகள் தீப்ஷிதா (7), லட்சுமி (2), அபிதேஷ் (7), திரோஷ் (5), மற்றும் ரத்தீஸ்-ன் மனைவி வீணா (30) ஆகிய 7 பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். 

ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ரூபேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது படுகாயமடைந்த 6 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...