எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு

கோவை, டிசம்பர் 28

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் நோயாளிகள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் வகையில் பாரதியார் பல்கலைக் கழகத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.



கோவை பாரதியார் பல்கலைக்கழக, சமூக பணியியல் துறையின் முதலாம் ஆண்டு மாணவர்கள் குழுத் திட்டத்தின் சார்பாக எட்டிமடை பகுதியில் அமைந்துள்ள எய்ட்ஸ் நோயாளிகளின் காப்பகமான “அசீசி ஸ்நேஹாலயா”- வில் “ஆரோக்கியம், தூய்மை மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுதலை” என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.



இதில், தூய்மை இந்தியா திட்டத்தின் கோவை மாநகர உறுப்பினரும், தெற்கு பகுதியின் சமூக ஆர்வலர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான அப்துல் ஹக்கீம் பங்கேற்று விழிப்புணர்வு உரை ஆற்றினார்.



இதனைத்தொடர்ந்து, “கவலையில் இருந்து விடுதலை” என்ற தலைப்பில் உளவியல் நிபுணர் முஹம்மது இஸ்மாயில் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வின் இறுதியாக குழந்தைகள் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...