நாடு முழுவதும் ஜன.,7-ம் தேதி நீட் தேர்வு நடக்கிறது: தமிழகத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்

மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கு ஜனவரி 7-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர்.


டிசம்பர் 28

மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கு ஜனவரி 7-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர்.

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்டி, எம்எஸ் பட்டமேற்படிப்பிலும் பட்டய மேற்படிப்பிலும் (டிப்ளமோ) 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மூலம் நடத்தப்படுகிறது.

தேசிய தேர்வுகள் வாரியம் நடத்தும் நீட் தேர்வுக்கு இணையத்தில் விண்ணப்பிப்பது கடந்த அக்டோபர் 31-ம் தேதி தொடங்கி நவம்பர் 27-ம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வு இணையம் மூலம் வரும் ஜனவரி 7-ம் தேதி நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி உட்பட நாடு முழுவதும் 129 நகரங்களில் இத்தேர்வு நடக்கிறது. தேர்வு முடிவு ஜனவரி 31-ம் தேதி வெளியிடப்படுகிறது.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...