மும்பையில் தனியார் மில் தீவிபத்தில் 15 பேர் பலி: பிரதமர் மோடி வேதனை

மும்பையில் உள்ள தனியார் மில் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இந்தத் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 29

மும்பையில் உள்ள தனியார் மில் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இந்தத் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள கமலா மில் வளாகத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 உடல்கருகி பலியாகினர். 19 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

இந்த நிலையில், மும்பை தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுபற்றி டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மும்பையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.  துயரமான இந்தச் சமயத்தில் என்னுடைய எண்ணங்கள் எல்லாம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை பற்றியே உள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...