கோவையில் கஞ்சா கடத்தியதாக கேரள வாலிபர் கைது: 6 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவையில் கஞ்சா கடத்தியதாக நேற்று கேரளாவை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை, டிசம்பர் 29

கோவையில் கஞ்சா கடத்தியதாக நேற்று கேரளாவை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கேரள மாநிலம் ஒட்டப்பாலம் பகுதியை சேர்ந்தவர் உமர் (25). பணி நிமித்தமாக கோவை வந்த அவர் கோவைபுதூர் பகுதியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று இரவு உமரும் மற்றுமொரு நபரும் உக்கடம் பைபாஸ் சாலை வழியாக ஆத்துப்பாலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, உக்கடம் போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். போலீசார் உமரின் வாகனத்தை நிறுத்த முயன்றபோது அவர் வண்டியை நிறுத்தாமல் சென்றார். இதானால் சந்தேகமடைந்த போலீசார் அவரை விரட்டினர். அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கரம் வாகனத்தில் இருந்த இருவரும் கீழே விழுந்தனர்.

இந்த சூழலில், உமருடன் வந்த மற்றொரு வாலிபர் தப்பியோடினார். போலீசார் உமரிடம் சோதனை நடத்தியபோது 6 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து உமரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் விசாரித்தனர். அப்போது, தன்னுடன் வந்த நபர் 'லிப்ட்' கேட்டு வந்ததாகவும், அவரே கஞ்சா பொட்டலத்தை கொண்டு வந்திருக்கலாம் என்றும் கூறினார். 

தற்போது, உமரை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...