குன்னூர் நகராட்சி பேருந்து நிலையம் ரூ. 44 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும்: முதலமைச்சர்

டிசம்பர் 30

நீலகிரியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டிய பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அறிவிப்புகள் பின்வருமாறு :- 

1) இம்மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியினரான தோடர், கோத்தர், இருளர், காட்டுநாயக்கர், குறும்பர் மற்றும் பனியர் ஆகியோரின் 500 குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்து உள்ளதால் அவை 5 கோடி ரூபாய் செலவில் பழங்குடியினர் நலத்துறை மூலம் பழுதுபார்க்கப்படும்.

2) குன்னூர் நகராட்சி பேருந்து நிலையம் 44 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

3) கூடலூர் பேருந்து நிலையம் அதிக பேருந்துகளை நிறுத்தும் வகையில் 4.75 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்படும்.

4) இந்த மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டப்படும்.

5) உதகமண்டலம் நகராட்சிக்கு உட்பட்ட சாலைகள் 2.73 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்படும்.

6) சுற்றுலா தலமான உதகையில் வாகனங்கள் நிறுத்தும் வசதியை மேம்படுத்த, ரோஜா பூங்காவில் பல்வகை அடுக்கு வாகன நிறுத்துமிடம் தனியார் பங்களிப்புடன் 3 கோடி ரூபாய் செலவில் புதியதாகக் கட்டப்படும்.

7) உதகமண்டல வட்டாட்சியர் அலுவலகம் புதியதாக கட்டப்படும்.

8) உதகை நகராட்சியில் உள்ள கோடப்மந்து கால்வாயில் உள்ள பழுதுகள் நீக்கப்படும்.

9) இம்மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மாணவர்களின் உயர் கல்வி கற்றல் விகிதத்தை அதிகரிக்க ஏதுவாக கோத்தகிரியில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மண்டல மையம் ஒன்று 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

மருத்துவ வசதிகள்:

10) உயர்தர மருத்துவ வசதிகளுடன் கூடிய நான்கு ‘108 அவசர ஊர்திகள்’ வழங்கப்படும்.

11) நீலகிரி மாவட்டத்தில் 1.09 கோடி ரூபாய் மதிப்பில் காசநோய் ஒழிப்பு சிறப்பு திட்டம் தொடங்கப்படும்.

12) நீலகிரி மாவட்டத்தில் 67.5 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய மருந்து கிடங்கு வசதி ஏற்படுத்தப்படும்.

13) நீலகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் எக்கோகார்டியாகிராம் கருவி, மூப்பியல் பிரிவு, நுரையீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வசதி ஏற்படுத்தப்படும்.

14) நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றும் 194 கிராமப்புற சுகாதார செவிலியர்களுக்கு மருத்துவ புள்ளி விவரங்களைப் பதிவு செய்திட 19.40 லட்சம் மதிப்பில் கையடக்க கணினி வழங்கப்படும்.

15) உதகமண்டலம் அரசு மருத்துவமனையில் 64.70 லட்சம் ரூபாய் மதிப்பில் டயாலிசிஸ், எண்டோஸ்கோப், நவீன ஆய்வக உபகரணங்கள் மற்றும் தடுப்பூசி மருந்து சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்.

16) குன்னூர் அரசு மருத்துவமனையில் 64.50 இலட்சம் மதிப்பில் விரிவான ஆரம்ப நல்வாழ்வு சேவைகள் வழங்கப்படும்.

17) நெலாக்கோட்டை அரசு மருத்துவமனையில் 16 இலட்சம் ரூபாய் மதிப்பில் நவீன கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.

மின் வசதிகள்

18) நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கெரடாமட்டம், குன்னூர் சிம்ஸ்பார்க் மற்றும் கோத்தகிரி அரவேனுவில் புதிய 33/11 கே.வி. துணை மின் நிலையங்கள் ரூ.24.55 கோடி செலவில் அமைக்கப்படும்.

19) நீலகிரி மாவட்டம், கடநாடு பஞ்சாயத்தில் புதிய 110/11 கி.வோ. மலர்பெட்டு துணை மின் நிலையம் 4.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

20) நீலகிரி மாவட்டத்தில் 110/11 கி.வோ. கட்டபெட்டு துணை மின் நிலையத்தில் 1.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1 ஒ 10 எம்.வி.ஏ. மின் மாற்றி 2 ஒ 10 எம்.வி.ஏ. மின் மாற்றிகளாக தரம் உயர்த்தப்படும்.

21) நீலகிரி மாவட்டத்தில் 110/11 கி.வோ. ஜெகதளா துணை மின் நிலையத்தில் 1.23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 ஒ 10 எம்.வி.ஏ. மின் மாற்றிகள் தரம் உயர்த்தப்படும்.

22) நீலகிரி மாவட்டத்தில் 110/11 கி.வோ. உதகை துணை மின் நிலையத்தில் 2.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 ஒ 10 எம்.வி.ஏ. மின் மாற்றிகள் 2 ஒ 16 எம்.வி.ஏ. மின் மாற்றிகளாக தரம் உயர்த்தப்படும்.

23) நீலகிரி மின் பகிர்மான வட்டத்தில் புதியதாக கணினி முறையில் மின்தடை பழுது நீக்கும் மையம் 19.50 லட்சம் ரூபாய் மதிப்பில் நிறுவப்படும்.

சாலை மேம்பாட்டு வசதிகள்:

24) கொதுமுடி எப்பநாடு சாலையில் 4.40 கி.மீ நீளச் சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி மத்திய சாலை நிதி திட்டத்தின் கீழ் 4.75 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

25) ஹெலன் எல்லமலை பெரிய சோலை சாலையில் 6.30 கி.மீ நீள சாலையை மேம்பாடு செய்யும் பணி மத்திய சாலை நிதி திட்டத்தின் கீழ் 5.35 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

அதேபோல, மேடையில் வீற்றிருக்கின்ற நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பெருமக்கள், பல கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள்.

நீலகிரி மாவட்டத்தில் சிறு தேயிலை விவசாயிகளுக்கு பசுந்தேயிலை மானியம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். அதை இந்த அரசு கவனத்தோடு பரிசீலித்து அதற்குண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது. 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக இருக்கும் சிறு தேயிலை விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று அவர்களது நலன் காக்கும் பொருட்டு 2017-18ஆம் ஆண்டில் பசுந்தேயிலை கிலோ ஒன்றிற்கு ரூ.2/- வீதம் மானியம் அளிக்க உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக கூடுதலாக 12 கோடி ரூபாய் செலவு செய்யப்படும் என்பதையும் இந்த தருணத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். 

அதேபோல, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலமாக 58 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உதகமண்டலம் நகராட்சி, குன்னூர் நகராட்சி, நெல்லியாளம் நகராட்சியிலும் மற்றும் அவலாஞ்சியிலும் 1,480 பயனாளிகளுக்கு புதிய குடியிருப்புகள் கட்டித்தரப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். எனக் கூறினார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...