இளைஞர்களிடையே புதிய எண்ணங்களை உருவாக்கும் ”ஐடியத்தான் - 2017”

கோவை, டிசம்பர் 30

எஸ்என்எஸ் கல்விக் குழுமத்தின் சார்பில் இளைஞர்களிடையே புதிய எண்ணங்களை உருவாக்கும் விதமாக ”ஐடியத்தான் -2017” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. 

எஸ்என்எஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ”தி யூத் ஃபார்ம்” மற்றும் ஸ்டார்ட்அப் பயணம் அமைப்பின் நிறுவனர் ஆர்.ஜி. நவின்கிருஷ்ணா மற்றும் எஸ்என்எஸ் கல்விக் குழுமத்தின் தொழில்நுட்ப இயக்குநர் நலின் சுப்ரமணியம் ஆகியோர் ”ஐடியத்தான் -2017” என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். 



இந்த நிகழ்ச்சியானது, மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே நல்ல உத்வேகம் அளிக்கக்கூடிய மற்றும் புதிய எண்ணங்களை உருவாக்கும் வகையிலான யோசனைகளை வழங்குபவர்களுக்கு பாராட்டு தெரிவித்து விருதுகள் வழங்கப்படுவதாகும். இதில், சுமார் 1,600 பேர் அடங்கிய 420 அணிகள் கலந்து கொண்டன. 3 நாட்களாக நடைபெற்ற இப்போட்டியில் 49 அணிகள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.



தொடர்ந்து, 48 மணிநேரம் நடக்கும் இந்த இறுதிச்சுற்றுப் போட்டியில், வெற்றி பெறும் முதல் 10 அணிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படும். முதல் 5 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு ரொக்கம் வழங்கப்படும். நாளை நடைபெறும் இறுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி, எஸ்என்எஸ் கல்விக் குழுமத்தின் தொழில்நுட்ப இயக்குநருடன் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். 

இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய ”தி யூத் ஃபார்ம்” மற்றும் ஸ்டார்ட்அப் பயணம் அமைப்பின் நிறுவனர் ஆர்.ஜி. நவின்கிருஷ்ணா, இளைஞர்கள் மனதில் புதிய எண்ணத்தை உருவாக்கவும், பல ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை வெளிக்கொண்டு வருவதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன்மூலம் சமுதாயத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், தரமான வாழ்க்கையை வாழவும் முடியும்,. இவ்வாறு கூறினார். 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...