கோவையில் புத்தாண்டு கொண்டாட வந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி

கோவை, ஜனவரி.1: 

கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வந்த மூன்று மாணவர்கள் சலைவிபத்தில் சிக்கி பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் பகுதியை சேர்ந்தவர் ராகுல். கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றார்.

இவர் கோவையொ புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு திருப்பூரில் இருந்து தனது நண்பர்களுடன் கார் மூலம் கோவை நோக்கி வந்து கொண்டிருந்தார். 

அவர்களது கார் சூலூரை அடுத்த தென்னம்பாளையம் அருகே வந்த போது சாலையில் பஞ்சாராகி நின்று கொண்டு இருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் காரில் வந்த ராகுல் , தாலிப், பிரசாத் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும்,  படுகாயமடைந்த தியாகு என்பவர்  கோவை அரசு மருத்துவமனையிலும்,  நவீன், சதாம் உசேன், சுரேஷ், நவீன் நான்கு பேர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து சூலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவையில் நேற்று இரவு நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட  வாகன விபத்துகள் மற்றும் மோதல்களினால் காயமடைந்த 80 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அம்மருத்துவமனையில் ஓரே நேரத்தில் ஏராளமானோர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருப்பதால் விபத்து மற்றும் காயசிகிச்சை பிரிவில் நெரிசல் அதிகரித்துள்ளது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...