அபராதம் இல்லை..! அடி இல்லை..! மகிழ்ச்சி மட்டுமே : போலீசாருடன் புத்தாண்டு கொண்டாடிய கோவை மக்கள்


கோவை, ஜனவரி.1 :- 

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய வாலிபர்களை பிடித்த போலீசார் அவர்களுடனேயே புத்தாண்டு கொண்டாடியது கோவை மக்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. 

ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கோவையில் பஞ்சமே இல்லை. 

மாநகரின் பெரும்பாலான இடங்களில் தார் சாலைகளே தெரியாத அளவிற்கு வாகனங்களும், மக்கள் கூட்டமும் அலை மோதும்.

அவ்வாறே இந்த ஆண்டும் மக்கள் மகிழ்ச்சியுற புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். 

கோவையில் வழக்கமாக இரவு ஒரு மணி வரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் அனுமதி வழங்குவர். 

அதன்பிறகு சாலையில் கூப்பாடு போட்டு சுற்றித்திரியும் வாலிபர்களை லத்தியால் அடித்து விரட்டும் பணி மேற்கொள்ளப்படும்

கடந்த 2016-ம் ஆண்டில் கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் சற்றே மாறுதல் ஏற்பட்டது. 

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிவருபவர்களை பிடித்து அபராதம் விதிக்காமல், அவர்களை போலீசார் அமைத்த பந்தல்களின் கீழ் அமர வைத்து, கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடி, பின்னர் போதை தெளிந்தவுடன் வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தை அப்போதைய மாநகர போக்குவரத்து துணை ஆணையர் S. சரவணன் அறிமுகப்படுத்தினார். 

இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தும் ஒரு மணிக்கு மேல் போதையில் சுற்றிரித்திரியும் வாலிபர்களை பிடித்து அபராதம் விதித்தோ, அல்லது அடித்து விரட்டும் வழக்கத்தையோ போலீசார் கைவிடவில்லை.

புத்தாண்டு தினத்தில் போலீசாரிடம் அடி வாங்கியபின், வாழ்கையிலேயே அடிவிழுந்துவிட்டது போல் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு அடுத்தநாள் வழக்கம் போல தனது வாழ்க்கையை  கவனித்து வந்தனர் இளைஞர்கள்.

ஆனால், இந்தாண்டு புத்தாண்டு கோவை இளைஞர்களை மகிழச் செய்துள்ளது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிவந்த வாலிபர்களை பிடித்த போலீசார், மாநகரின்  பிரத்யேகமாக அமைக்கப்பட்ட 22 பந்தல்களில் கீழ் அவர்களை அமரவைத்து கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்தினர். 

பந்தல்களின் கீழ் மது போதையில் பிதற்றிக்கொண்டிருந்த வாலிபர்களிடம் சற்றும் முகம் சுழிக்காமல், 'இன்னிக்கு போலீசா பேசல, உன் பிரண்டா சொல்றேன், பேசாம உக்காருப்பா' என்று கனிவுடன் பேசிய பெண் காவலர்களையும் காண முடிந்தது.

குத்துப்பாட்டு, ஆட்டம் கொண்டாட்டம் என ஒரு நட்சத்திர விடுதியில் புத்தாண்டு கொண்டாடுவதைப் போலவே அங்கு போதையில் கொண்டாடிக்கொண்டிருந்த  வாலிபர்கள் உணர்ந்திருக்க வேண்டும். 

இறுதியில், மாநகர காவல் ஆணையர் ஒவ்வொரு பந்தல்களுக்கும் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த கேக்-கை வெட்டி இளைஞர்களுக்கும், சக போலீசாருக்கும் வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். 

அதன் பிறகு வாலிபர்களிடம் 'மெதுவா போங்க' என்று கூறி வாகனங்களை ஓப்படைத்து அனுப்பினர் கோவை போலீசார்.

இரண்டு மணிக்கு மேல் மக்கள் கூட்டம் சற்றே குறைந்தது. இருந்த போதிலும் சிலர் கொண்டாட்டங்களை நிறுத்தவில்லை.

ஆனால், அவர்களை பிடித்து அபராதம் விதித்தோ, அடித்தோ தண்டிக்காத போலீசார், மாறாக பாதுகாப்பான புத்தாண்டை கொண்டாடவே இரவு முழுவதும் பணியில் இருந்தனர். 

https://m.facebook.com/story.php?story_fbid=1594239467308885&id=925853184147520

இந்த ஆண்டு கோவை மாநகர காவல்துறையின் அன்பின் போக்கிற்கு கோவை மக்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக நன்றிகளை தெரிவித்தவண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...