இந்திய மருத்துவ கவுன்சிலை கலைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு : அரசு மருத்துவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டம்

இந்திய மருத்துவ கவுன்சிலை கலைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை, ஜனவரி 2

இந்திய மருத்துவ கவுன்சிலை கலைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு, தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இது தொடர்பான மசோதாவை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்துள்ளது. இதற்கு, நாடு முழுவதும் மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் வெளிநோயாளிகளுக்கான சிகிச்சையானது காலை 6 மணி முதல் மாலை 6 மணி அவசர சிகிச்சைகள் தவிர மற்ற சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளது. கோவையில் மட்டும் இன்று 5,000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்த அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதாக இந்திய மருத்துவ சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர். ரவிக்குமார் தெரிவித்தார்.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கையினை கண்டித்து கோவை அரசு மருத்துவமனையில் இன்று காலை அரசு மருத்துவர்கள் ஒரு மணிநேர பணிப் புறக்கணிப்பு செய்தனர். மேலும், கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் கூறுகையில், "இந்திய மருத்துவ கவுன்சில் தன்னாட்சி பெற்ற அமைப்பாக இருந்த நிலையில், அதனைக் கலைத்து விட்டு தேசிய மருத்துவ ஆணையம் அமைத்து அதை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், ஆயுஷ் மருத்துவர்கள் 6 மாதம் பயிற்சி எடுத்தால், அலோபதி மருத்துவம் பார்க்கலாம் என புதிய மசோதாவில் உள்ளது. இது போலி மருத்துவர்களை உருவாக்கும். தேசிய மருத்துவ ஆணையத்தில் மாநில அரசுகளுக்கு எந்த உரிமையும் கொடுக்கப்படவில்லை. இது மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல் இந்திய மருத்துவ கவுன்சிலை கலைக்கும் நடவடிக்கையினை மத்திய அரசு கைவிட வேண்டும். இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் போராட்டங்கள் நடத்துவோம்" என்றனர். 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...