3-ம் ஆண்டு ” டேஸ்ட் ஆப் கோயம்புத்தூர்” உணவுத் திருவிழா வரும் 5-ம் தேதி தொடக்கம்

வ.உ.சி மைதானத்தில் 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில், அனைத்து முன்னணி ஓட்டல்கள், ரெஸ்ட்டரெண்ட்கள் ஒரே இடத்தில் சங்கமிக்க உள்ளன. சைவம், அசைவம், இனிப்பு, ஐஸ் க்ரீம்கள், கேக்குகள், பழரசங்கள் என பலவகையான உணவுகளை ருசிக்கலாம். என இன்று நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

கோவை, ஜனவரி 02

கோவை மாவட்ட ஓட்டல் கூட்டமைப்பு சார்பில் 3-ம் ஆண்டு ” டேஸ்ட் ஆப் கோயம்புத்தூர்” என்ற உணவுத்திருவிழா வரும் 5-ம் தேதி தொடங்குகிறது. 



வ.உ.சி மைதானத்தில் 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில், அனைத்து முன்னணி ஓட்டல்கள், ரெஸ்ட்டரெண்ட்கள் ஒரே இடத்தில் சங்கமிக்க உள்ளன. சைவம், அசைவம், இனிப்பு, ஐஸ் க்ரீம்கள், கேக்குகள், பழரசங்கள் என பலவகையான உணவுகளை ருசிக்கலாம். என இன்று நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். 

மில்கி மிஸ்ட் தயாரிப்புகள் சார்பில் நடக்கும் இந்த விழாவில், 140 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. அதில், 30 முதல் 40 அரங்குகள் அசைவத்திற்கும், 20 முதல் 25 சைவ அரங்குகளும், 10 முதல் 20 வரை ஐஸ் க்ரீம்கள், கேக்குகள், பழரசங்கள் உள்ளிட்டவைகளுக்கு அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இந்த உணவுத் திருவிழாவில் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான பொதுமக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த விழாவில் பங்கேற்பதற்கு, நபருக்கு ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும். அதில், ரூ.50 நுழைவுக்கட்டணம் தவிர்த்து எஞ்சிய ரூ. 100-க்கு தேவையான உணவுகளை சாப்பிட்டு மகிழலாம். 

வரும் 5-ம் தேதி மாலை 04.30 மணிக்கு தொடங்கும் இந்த உணவுத் திருவிழாவை, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், காவல் ஆணையர் பெரியய்யா, எம்எல்ஏக்கள் அருண்குமார், அம்மன் அர்ஜீன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

தொடக்க நாளில், ஆளப்போறா தமிழன் பாடல் புகழ் திரைப்பட பின்னணி பாடகர் சத்ய பிரகாஷ் குழுவினரின் இசைநிகழ்ச்சி நடைபெறுகிறது. 6-ம் தேதியன்று விஜய் டிவி சூப்பர் சிங்கர் ப்ரியா, நிக்கில் மேத்யூ குழுவினரின் இசைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. அதே நாளில், சின்னத்திரை சமையற்கலைஞரும், நடிகையுமான அனுராதா கிருஷ்ணடுமுர்த்தியின் சமையல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 7-ம் தேதி இயற்கை உணவு மருத்துவர் ஆறாம்திணை சிவராமனின் உணவுக் கருத்தரங்கும், ஜக்ளர் இட்டைச் சகோதரர்களின் ஜக்ளிங் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிகளை ஜீ தொலைக்காட்சி புகழ் அர்ச்சனா தொகுத்து வழங்குகிறார். 

இந்த நிகழ்ச்சிக்கு வருபவர்களை மகிழ்விக்கும் விதமாக திண்டுக்கல் சக்திபோர் பறையின் சார்பில் தப்பாட்டம், ஒயிலாட்டம் ஆகியன நடைபெற இருக்கிறது. மேலும், பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும், மருத்துவ வசதிகளும் செய்யப்பட உள்ளது. 3 நாட்கள் நடக்கும் இந்த உணவுத் திருவிழா, மாலை 05-00 மணி முதல் 11.00 மணி வரை நடக்கிறது. 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...