சாக்கடையில் கலக்கும் சிறுவாணி, குடிநீர் தட்டுப்பாட்டில் பொதுமக்கள் - அலட்சியத்தில் மாவட்ட நிர்வாகம்

கோவையின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சிறுவாணி குடிநீர், வீணாக சாக்கடையில் கலந்து, அதன் புனிதத்தை இழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கோவை, ஜனவரி 02

கோவையின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சிறுவாணி குடிநீர், வீணாக சாக்கடையில் கலந்து, அதன் புனிதத்தை இழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த அலட்சியம், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான குடிநீர் தட்டுப்பாட்டிற்கு வழிவகுத்துள்ளது. 



கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகம் முறையாக வழங்கப்படுவதில்லை. சுமார் பத்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வந்தாலும், குடிநீர் வரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. நகரில் அமைந்துள்ள பல்வேறு தண்ணீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீரோடு சாக்கடை நீர் கலப்பதால், அசுத்தமான நீரைப் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு, குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் தவித்து வரும் சூழலில், மாநகராட்சியின் அலட்சியத்தால், தூய்மையான சிறுவாணி குடிநீர், சாக்கடையில் ஓடும் அவலம் உருவாகியுள்ளது.

காந்தி பூங்கா அருகே, வார்டு எண் 21-ற்கு உட்பட்ட சுண்டம்பாளையம் சாலையை ஒட்டியுள்ள பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இப்பகுதி வழியாக, கோவை மக்களின் தாகத்தை தீர்க்கும் சிறுவாணி குடிநீர் திட்டக் குழாய்கள் செல்கிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன், இங்கு மேற்கொள்ளப்பட்ட சாலை பராமரிப்பு பணியின் போது, குடிநீர் குழாயில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி வழியாக முத்தண்ணன் குளத்திற்கு செல்லும் சாக்கடையில் குடிநீர் கலந்து வீணாகி வருகின்றது. இது குறித்து பலமுறை புகாரளித்தும் மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என குடியிருப்பு வாசிகள் புகார் அளிக்கின்றனர். 

'எட்டு நாளுக்கு ஒரு முறைதான் இந்த பகுதியில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே குடிநீர் வரும், அதற்குள் அடுத்த பத்து நாளுக்கு தேவையான குடிநீரைப் பிடித்து சேமித்துக் கொள்ள வேண்டும். பல நாட்களில், அசுத்தமான குடிநீரும் வரும், வேறுவழியில்லாமல் அதையும் பயன்படுத்தியே வருகிறோம். இதனால், இப்பகுதியில் உள்ள குழந்தைகளும், முதியவர்களும் காய்ச்சல், வயிற்றுபோக்கு போன்ற நோய்களால் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். கடைகளில் விற்பனை செய்யப்படும் தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் அளவிற்கு வசதியும் இல்லை. இந்நிலையில், வாழ்வாதாரத்திற்கு தேவையான சுத்தமான குடிநீர் சாக்கடையில் கலந்து வீணாவதை பார்ப்பதற்கே, வேதனையாக உள்ளது' என்று கண்கலங்கினார் இப்பகுதியில் வசிக்கும் திருமதி. அமிர்தம்.

இப்பிரச்சனை குறித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் கோவை மாநகர செயலாளரும், 21ஆம் வார்டின் முன்னாள் கவுன்சிலருமான திரு.எம்.எஸ்.வேல்முருகன் கூறியதாவது, 'சாக்கடையில் குடிநீர் வீணாவதை தடுத்து நிறுத்தக்கோரி பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் புகாரளித்தும், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சில மாதங்களுக்கு முன் நடத்தப்பட்ட ஆய்வில், இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர், கடுமையாக பாதிக்கப்பட்டு, மிகவும் அசுத்தமான நிலையில் உள்ளதாக எச்சரித்துள்ளனர். பல வருடங்களாக கடுமையான நீர் தட்டுப்பாடும் இங்கு நிலவி வருகிறது. 

குளங்கள் பாதுகாப்பு, நீர்சேமிப்பு, சாலை பராமரிப்பு என்ற பெயரில் அரசாங்கத்தால் வழங்கப்படும் நிதிகளும், மக்களின் வரிப்பணமும், மக்கள் நலனுக்காக பயன்படுத்தப்படுவதில்லை. உள்ளாட்சி நிர்வாகிகள் இல்லாததால், அசுத்தமான குடிநீர், பரமரிக்கப்பாடாத சாலைகள், எரியாத மின்விளக்குகள் என மக்களின் பிரச்சனைகள் அதிகரித்து கொண்டேயிருக்கிறது. உள்ளாட்சி நிர்வாகம் தான், இதுபோன்ற அடிப்படை பிரச்சனைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் உடனடியாக நடத்தப்பட வேண்டும்' என்றார்.

மேலும், 'மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவைப்படும், அடிப்படை தேவைகளில் ஒன்றான சுத்தமான குடிநீர், சாக்கடையில் கலந்து வீணாவதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...