ஆர்.டி.ஐ (தகவல் அறியும் உரிமை) மனு அளித்தவருக்கு 13,6௦௦ ரூபாய் கட்டணம் செலுத்த உத்தரவிட்ட கோவை மாநகராட்சி

கோவை, டிசம்பர் 3

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம், மாதம் ஒருமுறை அல்லது இருமுறை கூட்டப்பட்டு, மக்கள் நலன் சார்ந்த பல்வேறு தீர்மானங்கள் அதில் இயற்றப்படும். தற்போது உள்ளாட்சி நிர்வாகிகள் இல்லாததால் மாநகராட்சி கமிஷனர் தலைமையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த தீர்மானங்கள் அனைத்தும் மக்களின் பார்வைக்காக மாநகராட்சி இணையதளத்தில் வெளியடப்பட்டு வந்தன.

ஆனால், கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்ற மாமன்ற கூட்டத்தின் தீர்மானங்கன்கள் எதுவும் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. இதனால், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மர்மமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், சவுரிபாளையத்தை சேர்ந்த ரிசர்வ் சைட் மீட்பு சமூக ஆர்வலர் திரு. எஸ். பி. தியாகராஜன் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ‘கோவை மாநகராட்சி நிர்வாகத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தனி அலுவலரின் தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான பொருள்களின் அட்டவணை நகல்களை, உரிய கட்டணத்தை பெற்றுக்கொண்டு வழங்குமாறு’ மாநகராட்சி மாமன்ற செயலாளர் பதவியில் உள்ள பொது தகவல் அலுவலரிடம் கேட்டுள்ளார்.



தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி, இதற்கு அதிகபட்சமாக ரூ.5௦௦/- மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், மாநகராட்சி நிர்வாகத்தால் அனுப்பபட்ட பதில் கடித்ததில், 13 ஆயிரத்து 6௦௦ ரூபாய் செலுத்தி தகவலை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தியாகராஜன் கூறியதாவது, ‘மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இயற்றப்படும் தீர்மானங்கள், இணையதளத்தில் வெளியிடப்படாதது, பல சந்தேகங்களை எழுப்பி வருகிறது. இதனால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், அவற்றை பெற மனு அளித்ததற்கு, ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இயற்றப்பட்ட மாமன்ற தீர்மானங்களின் பொருள் மொத்தம் 129 எனவும், அவற்றுக்கு, 13 ஆயிரத்து 6௦௦ ரூபாய் கட்டணம் செலுத்தி தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறும் கடிதம் அனுப்பியுள்ளனர். தீர்மான பொருள்களின் அட்டவணை, மொத்தம் ஐந்து பக்கங்கள் மட்டுமே வரும், அவற்றுக்கு அதிக பட்சம் ரூ.5௦௦/- கட்டணம் செலுத்தினால் போதும். மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிமுறைகள் தெரியவில்லையா? இல்லை தீர்மானங்களை மர்மாகவே வைத்திருக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார்களா, என்பது தெரியவில்லை’ என்றார்.

பொது தகவல் அலுவரிடம் இதுபற்றி கேட்டபோது, ‘தீர்மான பொருள்களின் அட்டவணை என்ற ஒன்று தகவல் அறியும் உரிமைச் சட்ட விதிகளின் படி எதுவும் இல்லை. மனுதாரர் ‘நிகழ்ச்சி நிரல்’ என்று குறிப்பிட்டுருந்தால், அவற்றுக்கான கட்டணம் வலியுறுத்தப்பட்டிருக்கும்’ என்றார்.

மனுதாரரின் மனுவில் உரிய தகவல்கள் இல்லையென்றால், விளக்கம் கேட்டு தானே கடிதம் அனுப்பியிருக்க வேண்டும், என்ற சந்தேகத்திற்கும் மாமன்ற தீர்மானங்கள் இணையதளத்தில் வெளியிடப்பாடாதது ஏன் என்ற கேள்விக்கும், மாநகராட்சி அலுவலர்கள் முறையான பதில் கூற மறுத்து வருகின்றனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...