தற்காலிக ஓட்டுநர், நடத்துநர் மூலம் பேருந்துகள் இயக்க நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர்

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பேருந்து போக்குவரத்தை இயக்க தற்காலிக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்படுவார்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

ஜனவரி 5

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பேருந்து போக்குவரத்தை இயக்க தற்காலிக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்படுவார்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். 

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை திமுக உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்ததால் பேருந்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்று 2-வது நாளாக தொடர்கிறது. இன்று காலையில் ஒவ்வொரு டெப்போவிற்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆய்வு செய்தார். பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:- போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையின்படி அடிப்படை சம்பளத்தில் இருந்து 2.44 காரணி மடங்கு ஊதிய உயர்வு அளிப்பதாகக் கூறியதை 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால், 2.57 காரணி மடங்கு ஊதிய உயர்வு வேண்டும் என்று கூறி சில தொழிற்சங்கங்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. 22 முறை தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் மொத்த போக்குவரத்து தொழிலாளர்கள் 1 லட்சத்து 43 ஆயிரம் பேர் உள்ளனர். இதில் எங்களுடைய அண்ணா தொழிற்சங்கத்தில் மட்டும் 90 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். 70 சதவீத தொழிலாளர்கள் அண்ணா தொழிற்சங்கத்தில் உள்ளதால் இவர்களை வைத்து இன்று பேருந்துகளை இயக்கி வருகிறோம். எனவே, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. உரிய பாதுகாப்புடன் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும். 

போக்குவரத்து கழக வரலாற்றில் இவ்வளவு அதிக ஊதியம் இப்போதுதான் உயர்த்தி வழங்கப்படுகிறது. புதிய ஊதிய உயர்வு மூலம் அரசுக்கு வருடத்திற்கு ரூ.1000 கோடி செலவாகும். ஆனால், இதை ஏற்காமல் 13 தொழிற்சங்கத்தினர் அரசியல் செய்து வருகின்றனர். 36 சங்கங்கள் ஊதிய உயர்வை ஏற்றுக் கொண்டுள்ளன. எனவே தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இனி அவர்களுடன் பேச்சுவார்த்தை இல்லை.

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பேருந்து போக்குவரத்தை இயக்க தற்காலிக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்கள் மூலம் பேருந்துகளை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான பணிகள் அந்தந்த போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர்கள் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே திடீரென பேருந்துகளை நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்வது முறையா? சங்கத்தை வளர்ப்பதற்காக இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...