கோவையில் பேருந்துகள் சீராக இயக்கப்படுகிறதா என ஆட்சியர் ஆய்வு

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ள நிலையில் கோவையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றனவா என்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை, ஜனவரி 05

அடிப்படை ஊதியம், தர ஊதியத்துடன் 2.57 சதவிகிதம் ஊதியம் வழங்க வேண்டும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கோரிக்கை முன்வைத்தன. முதலில் 2.40 சதவிகிதம் மட்டுமே தர முடியும் என்று அறிவித்த தமிழக அரசு பின்னர் 2.44 சதவிகிதம் மட்டுமே தர முடியும் என்று பேச்சுவார்த்தைக்குப் பின் கூறியது. இதை ஏற்காத தொழிற்சங்கத்தினர் தமிழகம் முழுவதும் நேற்று மாலை முதல் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் கோவை காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் உள்ளிட்ட கோவையின் முக்கிய பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கோவை மண்டல தலைமை அலுவலக பணிமனையில் பேருந்துகள் சீராக இயக்கப்படுவதை ஆட்சியர் திரு டி.என். ஹரிஹரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதில், மாநகர காவல் ஆணையர் பெரியய்யா, போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் பாண்டி, பொபது மேலாளர் இ. கோவிந்தராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...