உதகையில் விபத்துகளை தடுக்க காவல் துறையினருக்கு வேகத்தை அளக்கும் கருவி

நீலகிரி மாவட்டம் உதகையில் சாலை விபத்துகளைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் புதியதாக வேகத்தை அளக்கும் உபகரணங்களை (Speeder Radar Gun) போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது.

நீலகிரி ஜனவரி 05

நீலகிரி மாவட்டம் உதகையில் சாலை விபத்துகளைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் புதியதாக வேகத்தை அளக்கும் உபகரணங்களை (Speeder Radar Gun) போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகையில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக அதிவேகமாக வாகனம் ஓட்டுதலால் விபத்துகள் அடிக்கடி நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், அதிவேகத்தைக் கண்காணிக்கவும், கணக்கிடவும் வேகத்தை அளக்கும் கருவிகளை மாவட்ட ஆட்சியர் காவல்துறையினருக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளார்.

மேலும், வாகன ஓட்டிகள் நகர்புறத்தில் மற்றும் நெடுஞ்சாலையில் நிர்ணயித்த வேகத்தைக் காட்டிலும் அதிகமாக 10 கி.மீ. வேகத்தில் வாகனம் ஓட்டினால் ரூ. 300-ம், அதற்கு மேல் அதிவேகமாக வாகனம் ஓட்டினால் ரூ. 400-ம், மிக அதிவேகமாக வாகனத்தை இயக்குபவர்களுக்கு ரூ. 1000-ம் அபராதம் விதிக்கப்படும். அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், வாகனத்தில் அதிக எடை ஏற்றுதல் மற்றும் குடிபோதையில் வாகனம் இயக்குதல் போன்ற குற்றங்களுக்கு 3 மாதங்கள் ஓட்டுநர் உரிமம் தற்காலிக தடை செய்யப்படும் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...