கர்ப்பிணி தாய்மார்களுக்கு தமிழக அரசின் சீர்வரிசை

கோவை, ஜனவரி 8

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர், செல்வபுரம், குனியமுத்தூர், ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்று கர்ப்பிணி தாய்மார்களுக்கு தமிக அரசின் சீர்வரிசைகளை வழங்கினார்.

கோவை மாவட்டத்திற்குட்பட்ட தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த ஆர்.எஸ்.புரம், தொண்டாமுத்தூர், செல்வபுரம், குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் சமுதாய வளைகாப்பு விழா மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து, கார்பிணி தாய்மார்களுக்கான சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், மகப்பேறு காலங்களில் சத்தான உணவு உண்ணவும், விரும்பியதை பெறவும் ஏழை எளிய பெண்கள் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு ரூ.18 ஆயிரம் மகப்பேறு கால நிதியுதவி வழங்கும் திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு சீர்வரிசைகளுடன் சமுதாய வளைகாப்பு விழா, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அம்மா குழந்தைகள் நலப்பெட்டகம், இரு பெண்குழந்தைகள் நிதியுதவித்திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாடு 

செயல்படுத்தி வருகிறது.

அதன்படி தற்போது சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி கோவையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சீர்வரிசையுடன் 5 வகையான சத்தான கலவை சாதங்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் கலந்து கொண்டுள்ள அனைவரும் ஆரோக்கியமான குழந்தையினை பெற்றெடுத்து நல்ல சமுதாயத்தினை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே. அர்ச்ஜூணன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வசந்தாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...