திரையரங்கில் தேசியகீதம் கட்டாயம் என்ற உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரி மத்திய அரசு மனு

கோவை, ஜனவரி 08

திரையரங்கில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என்ற உத்தரவை நிறுத்தி வைக்கும்படி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு செய்துள்ளது.

திரையரங்கில் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என கடந்த 2016ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தற்போது வரை நடைமுறையில் இருந்து வருகிறது. தேசிய கீதத்தை கட்டாயமாக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், பல்வேறு இடங்களில் தேசிய கீதம் இசைப்பது குறித்து வரையறை செய்ய அமைச்சரவையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு வரையறை அமைக்க குறைந்தபட்சம் 6 மாத காலம் அவகாசம் தேவைப்படுகிறது. வரையறை தயாரானவுடன் மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிடும். அதுவரையில் திரையரங்கில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என்கிற உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...