நலிந்து வரும் பாத்திர தொழில், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டுகோள்

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வணிகத்தில் புகழ்பெற்று வந்த அனுப்பர்பாளையம் பாத்திர தொழில் நலிவடைந்து வரும் நிலையில், இத்தொழிலைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கப் பாத்திர உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பூர், ஜனவரி 9

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வணிகத்தில் புகழ்பெற்று வந்த அனுப்பர்பாளையம் பாத்திர தொழில் நலிவடைந்து வரும் நிலையில், இத்தொழிலைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கப் பாத்திர உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதி என்பது திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் பனியன் தொழில் வளர்ச்சியடைவதற்கு முன் பாத்திர தொழில் மூலம் உலகறியச் செய்தது. கடந்த 30 வருடங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டத்தில் அனுப்பர்பாளயம், அம்மாபாளையம், அங்கேரிபாளையம் ஆகிய பகுதிகள் பாத்திரம் தயாரிப்பு தொழிலில் சிறந்து விளங்கியது. 

இப்பகுதிகளைச் சுற்றி சுமார் 2,000-க்கும் மேற்பட்ட பாத்திர பட்டறைகள் இருந்து வந்தது. இங்கு, எவர் சில்வர், பித்தளை, செம்பு என நாள்தோறும் 50 லட்சம் வரையில் பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இதன்மூலம், சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பைப் பெற்று வந்தனர். தற்போது, 300-க்கும் குறைவான பட்டறைகளும், 2,000-க்கும் குறைவான தொழிலாளர்களுமே தான் உள்ளனர்.

இங்கு தயாரிக்கப்படும் பாத்திரங்கள் இந்தியா கடந்து அமெரிக்க, சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் இலங்கை நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு லாபகரமாக இயங்கிவந்தது. நாளடைவில் திருப்பூரை சுற்றியுள்ள பகுதிகளில் வெகுவேகமாக வளர்ந்து வந்த பனியன் தொழிலாளர்கள் வேலைக்கு அங்கு செல்வதால் பாத்திர தொழில் சரிவடைந்து வருகிறது.

இது குறித்து பாத்திர உற்பத்தியாளர் மனோகர் கூறுகையில், “இளம் தலைமுறையினர் இத்தொழிலில் மீது ஆர்வம் காட்டாமல் வெவ்வேறு தொழில்களுக்கு சென்றுவிட்டதால் பாத்திரம் தயாரிப்பு தொழில் தற்போது சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்தத் தொழில் சரிவடைய இந்தத் தலைமுறை இளைஞர்கள் தங்கள் தொழில்களைப் பின்தொடர்ந்து எடுத்துச்செல்லவில்லை” என்றார்.

இத்தொழிலில், தொழிலாளர்களின் ஊதியம் குறைவு, அதனால் பெரும்பாலான தொழிலாளர்கள் பின்னலாடைத்துறைக்கு சென்றுவிட்டனர். மேலும், பிளாஸ்டிக் பொருட்களின் வளர்ச்சி பாத்திரத்தின் தேவைகளை முற்றிலுமாகவே குறைத்துவிட்டது.

“கடந்த காலங்களில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் 18 முதல் 108 வரையிலான பொருட்களை சீர்வரிசையாகக் கொடுக்கப்படும் போது எவர் சில்வர் ,செம்பு போன்ற பாத்திரங்களைப் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில், பிளாஸ்டிக், ஒன்யூஸ் பொருட்கள் வந்ததால் பாத்திரங்கள் பயன்படுத்தும் பழக்கமும் வெகுவாக குறைந்தது” என 15 வருடமாக இத்தொழிலில் ஈடுபட்டுவரும் கனகராஜ் கூறுகிறார்.

பாத்திர உற்பத்தியாளர்களுக்கென உள்ள சொசைட்டி மூலம் மானிய விலையில் மூலப்பொருட்களை பெற்றுகொடுத்து புதிய இயந்திரங்களை வாங்க அரசு உதவியிருந்தால் இத்தொழில் காப்பாற்றப்பட்டிருக்கும். தற்போது, வங்கிகளில் கூட பாத்திர தொழில் செய்வதற்கு எந்தவிதமான கடன்களும் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் பாத்திர உற்பத்தியாளர்கள் முன்வைக்கின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் முத்துசாமி கூறுகையில், “இத்தொழிலுக்கு அரசு செயல்படுத்தியுள்ள நலவாரிய திட்டங்களை முறைப்படி செயல்படுத்தினால் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யமுடியும். ஆனால், தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டாலும் அந்த சலுகைகள் எதுவும் வழங்காமல் காலம் தாழ்த்தி இழுத்தடிப்பு செய்வது போன்ற சம்பவங்கள் தொழிலாளர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.” என்றார்.

பொதுமக்கள் அபாயம் என அறிந்தும் பிளாஸ்டிக் போன்ற பொருட்களைப் பயன்படுத்துவதை குறைத்து பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும். அதேபோல, அரசும் பாத்திர தொழிலை மேம்படையச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாத்திர தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...