விவசாயிகள் நுண்ணீர் பாசன விழிப்புணர்வு முகாம் ஜன.1-யில் துவக்கம்

விவசாயிகள் மானிய விலையில் நுண்ணீர் பாசனம் அமைத்து பயனடையும் வகையில் ஜனவரி 11 மற்றும் 18ம் தேதியன்று விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது.

கோவை, ஜனவரி 9

விவசாயிகள் மானிய விலையில் நுண்ணீர் பாசனம் அமைத்து பயனடையும் வகையில் ஜனவரி 11 மற்றும் 18ம் தேதியன்று விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு அரசு தோட்டக்கலை துறை மற்றும் வேளாண்மைத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் விவசாயிகள் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசனம் மானியத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் வழங்கப்படும். 2017-18 ஆம் ஆண்டில் கோவை மாவட்ட தோட்டக்கலைத் துறைக்கு 15.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2000 எக்டர் அளவிற்கும், வேளாண்மைத் துறைக்கு 5.11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1165 எக்டர் அளவிற்கும் நுண்ணீர் பாசன மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், நில வரைபடம், மண் மற்றும் நீர் பரிசோதனை அறிக்கை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஒளிநகல், சிறு/குறு விவசாயிகள் சான்றிதழ் ஆகியவற்றுடன் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகி பெயர் பதிவு செய்து கொள்ளலாம்.

அரசு அங்கீகாரம் பெற்ற 34 நுண்ணீர் பாசன நிறுவனங்களில் தங்களுக்கு விருப்பமான நிறுவனத்தை தேர்ந்தெடுத்து நுண்ணீர் பாசனம் அமைத்துக் கொள்ளலாம்.

வரும் ஜனவரி 11ம் தேதியன்று தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கூட்ட அரங்கம் மற்றும் காரமடை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும், 18ம் தேதியன்று அன்னூர் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் பொள்ளாச்சி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் ஆகியவற்றில் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் இணைந்து நுண்ணீர் பாசன விழிப்புணர்வு முகாம் காலை 10 மணியளவில் நடைபெறும்.

மேலும், இந்நிகழ்வின் ஒரு பகுதியாக வருவாய் துறை சான்று பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

எனவே, நுண்ணீர் பாசன மானியம் பெற விரும்பும் விவசாயிகள் உடனடியாக தங்கள் பகுதி தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், வேளாண்மை உதவி இயக்குநர்கள், கோவை தடாகம் சாலையில் உள்ள வேளாண்மை இணை இயக்குநர் மற்றும் தோட்டக்கலை துறை இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...