2-ம் நிலைக் காவலராக பணிபுரிவதற்கு விண்ணப்பிக்க 27-ம் தேதி கடைசி நாள்

சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2-ம் நிலைக் காவலராக பணிபுரிவதற்கு விண்ணிப்பிக்க வரும் வரும் 27-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, ஜனவரி 09

சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2-ம் நிலைக் காவலராக பணிபுரிவதற்கு விண்ணிப்பிக்க வரும் வரும் 27-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாநிலம் முழுவதும் உள்ள 6,094 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்கள் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இவற்றில் 5 சதவீதம் இடங்கள் முன்னாள் படைவீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். தமிழ்ந்டு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமத்தினால் நடத்தப்படும் இத்தேர்வுக்கு ஜனவரி 27-ம் தேதி வரை விண்ணப்பிப்பதற்கான விவரங்கள் www.tnusrb.tn.gov.in  என்ற இணையதளத்தில் காணலாம். 

எனவே, சீருடைப் பணியாளர் தேர்விற்கு விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களை கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், இணையதள வழியாக விண்ணப்பித்து அவ்விண்ணப்பத்தின் நகலுடன் கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நலஉதவி இயக்குநர் அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்குமாறும், இதுதொடர்பாக மேலும் விபரம்பெற மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்தார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...