7-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 60 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களுக்கு நோட்டீஸ்

7-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 60 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை 68 பேருந்து ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ஜனவரி 10

7-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 60 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை 68 பேருந்து ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்கக்கோரி அரசு போக்குவரத்துக் கழகத்தின் 10 தொழிற்சங்கத்தினர் கடந்த வியாழக்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 23 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், பேருந்து தொழிலாளர்கள் தங்களது வேலைநிறுத்தத்தை கைவிட்டுப் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக அரசும், உயர்நீதிமன்றம் மீண்டும், மீண்டும் அறிவுறுத்தி வருகின்றன. 

பேருந்து தொழிலாளர்கள் அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை ஸ்டிரைக்கை தொடர அவர்கள் முடிவு செய்தனர். இதனால் பேருந்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் இன்று 7-வது நாளாக நீடிக்கிறது. முதலில் பணிக்கு வராமல் புறக்கணித்த பேருந்து தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினரையும் அழைத்து வந்து டெப்போக்கள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இன்று பேருந்து தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் தொழிலாளர் நல ஆணைய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பேருந்து தொழிலாளர்கள் அடுத்தடுத்து தினமும் ஆர்ப்பாட்டத்தை தொடர்வதால் அவர்களது வேலைநிறுத்தப் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. பேருந்துகள் ஓடாததால், தமிழகம் முழுவதும் பொதுமக்கள், அலுவலகம் செல்பவர்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள், வெளியூர் செல்பவர்கள், வெளி மாநிலங்களுக்கு செல்பவர்கள் என அனைத்துத்தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பேருந்துகள் இல்லாததால் ரயில், கார், ஷேர் ஆட்டோக்களை பயன்படுத்தி வருகின்றனர். 

பேருந்து தொழிலாளர்கள் பணிக்குத் திரும்ப அமைச்சர் விஜயபாஸ்கர் விதித்த கெடு நேற்று மாலையுடன் முடிந்தது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்கள் மூலம் விளக்கம் கேட்டு போராட்டத்தில் ஈடுபடும் பேருந்து ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று வரை சுமார் 60 ஆயிரம் பேருந்து தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது, சட்ட விரோதமாக நடந்து கொண்டதாக கூறி அவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மேலும் தொடரும் என்று போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாகத் தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூறி உள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அவதி, இயல்பு வாழ்க்கை பாதிப்பு மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் நிலை உருவாகியுள்ளது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...