போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ. 750 கோடி நிலுவைத் தொகை ஒதுக்கீடு: பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

ஒய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.750 கோடி நிலுவைத் தொகை பொங்கலுக்கு முன் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

ஜனவரி 10

ஒய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.750 கோடி நிலுவைத் தொகை பொங்கலுக்கு முன் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். 

ஓய்வூதிய நிலுவைத் தொகை, சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசுப் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 7-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசுக்கும் பலகோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்று 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.750 கோடி நிலுவைத் தொகை பொங்கலுக்கு முன் வழங்கப்படும் என்று அறிவித்தார். 

அவர் வெளியிட்ட அறிக்கையின் முழு விபரம் பின்வருமாறு:- போக்குவரத்துக் கழகங்களின் நிதிப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு முன்னுரிமை கொடுத்து, 2011ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை, அதிகப்படியான நிதி வழங்கி வந்துள்ளது. கடந்த காலங்களில் அதிகரித்து வந்த செலவினத்தை ஈடு செய்வதற்கு ஏற்ப, நிரந்தர நிதி ஆதாரத்தை ஏற்படுத்தாததால், போக்குவரத்துக் கழகங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்கின.

இச்சூழ்நிலையில், போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலைமையைச் சரிசெய்யும் பொருட்டு, நிதி ஆதாரத்தை ஏற்படுத்துவதற்கான உத்திகளை கடைப்பிடித்ததோடு, அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2011 முதல் இந்நாள் வரை, டீசல் விலை ஏற்றத்திற்கான தொகை 2,848.36 கோடி ரூபாயை அரசு மானியமாக வழங்கியுள்ளது. மேலும், அரசு பொதுமக்களின் நலன் கருதி, போக்குவரத்துக் கட்டணத்தை குறைந்த அளவிலேயே பராமரித்து வருகிறது.

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை, அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்திட, 5,138.57 கோடி ரூபாய் அளவிற்கு நிதி வழங்கியுள்ளது. 

2017-18ஆம் ஆண்டில் மட்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க 1,397.39 கோடி ரூபாயும், தற்போது பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உள்ளிட்ட நிலுவைத் தொகைக்காக, 291.99 கோடி ரூபாயும் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. போக்குவரத்துக் கழகங்களில் 30.11.2017 வரை பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்

தொகைக்காக 750 கோடி ரூபாயினை அரசு வழங்கும் என்பதை இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். 

மேலும், இந்த அறிவிப்பின் மூலம் வழங்கப்படும் 750 கோடி ரூபாய் தொகையானது, போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அளிக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இப்போது, அரசால் வழங்கப்படும் இத்தொகையுடன் சேர்த்து, போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வுகால பலன்களுக்காக மட்டும், இதுவரை தமிழ்நாடு அரசு 2,147.39 கோடி ரூபாய் வழங்கியுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகள் பலவற்றை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், பொது மக்களின் நலன் கருதி, தங்கள் போராட்டத்தை உடனடியாக கைவிட்டு, பணிக்குத் திரும்புமாறு இந்த அவையின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...