கோவில் உண்டியலை உடைத்து ரூ. 45 ஆயிரம் கொள்ளை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கோவில் உண்டியலை உடைத்து ரூபாய் 45 ஆயிரம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்பூர், ஜனவரி 10

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கோவில் உண்டியலை உடைத்து ரூபாய் 45 ஆயிரம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த காமநாயக்கன் பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பங்குனி மாதம் வெகு விமர்சையாக திருவிழா நடத்துவது வழக்கம். சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து இங்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடப்பதற்கு முன்பாக எண்ணப்படுவது வழக்கம்.



இந்நிலையில், இன்று (ஜன. 10) காலை கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் கோவில் உண்டியல் உடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இதில், கோவிலின் பின்புற சுவற்றின் மீது ஏறி உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த வேலால் உண்டியலின் பூட்டை உடைத்து அதிலிருந்த சுமார் 45 ஆயிரம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...