பொங்கல் பண்டிகைக்காக ஊதியமின்றி பேருந்தை இயக்கத் தயார்- போக்குவரத்துத் தொழிலாளர்கள்

தமிழக அரசு தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசினால் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்தபடி ஊதியம் இல்லாமல் பொங்கல் பண்டிகைக்காகப் பேருந்துகளை இயக்கத் தயார் என கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவை, ஜனவரி 10

கோவையில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் இன்று 7-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று கோவை மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துத் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "தமிழக அரசு உடனடியாக தொழிலாளர்களை அழைத்துப் பேச வேண்டும். தமிழக முதலமைச்சர் இந்த பிரச்சனையில் நேரடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும். தொழிலாளர்கள் விரும்பாத ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காக இன்று தொழிலாளர்கள் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறோம்.

மேலும், தமிழக அரசு சார்பில் தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசினால் ஊதியம் இல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்தபடியே இரண்டு நாட்கள் பொங்கல் பண்டிகைக்காகப் பேருந்தை இயக்கத் தயார்" என்றனர்.

இதனிடையே, போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பாக ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...