தூய்மைப் பணி, குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு மனிதச்சங்கிலியுடன் கோவை விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தும், 10-வது ஆண்டு கோவை விழா- 2018 கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

கோவை, ஜனவரி 10

கோவையில் உள்ள பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தும், 10-வது ஆண்டு கோவை விழா- 2018 கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக 6-வது நாளான நேற்று (ஜன. 9), கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா என்ற தலைப்பில் தூய்மைப்பணி நடைபெற்றது. இதில், கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் கலந்துக்கொண்டு தூய்மைப் பணியை தொடங்கி வைத்துப் பேசினார்.



அப்போது அவர் பேசுகையில், கோவை நமது ஊர். இதை நாம் தான் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். நமது சுற்றுப்புறம் தூய்மையாக இருந்தால்தான் எந்தவித நோய் பாதிப்பும் இன்றி, ஆரோக்கியமாக வாழ முடியும்.

கோவை விழாவின் ஒருபகுதியாக யங் இந்தியன்ஸ் அமைப்பினர் பேருந்து நிலையங்களைத் தூய்மைப்படுத்தும் பணியினை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குறியது. கோவையை தூய்மையாக வைத்துக்கொள்ள இதுபோன்ற அமைப்புகளின் முயற்சிக்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் முழு ஒத்துழைப்பை அளிக்கும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

தூய்மைப்பணி குறித்து யங் இந்தியன்ஸ் அமைப்பின் தலைவர் பிரசன்னா, துணைத்தலைவர் விஷ்ணு ஆகியோர் கூறுகையில், கோவை விழாவின் ஒரு பகுதியாக காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தூய்மைப்பணி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஜனவரி 11ம் தேதியன்று உக்கடம் பேருந்து நிலையத்தில் இப்பணி தொடர்ந்து நடைபெற உள்ளது.

அதைத்தொடர்ந்து ரயில் நிலைய சாலையில் தூய்மைப்பணி நடைபெற உள்ளது. பேருந்து நிலையங்களில் 50 குப்பைக்கூடைகள் வைக்கப்படும். இங்கு வரும் பொதுமக்கள் குப்பைகளை அந்தக்கூடைகளில் வீசி, பேருந்து நிலையத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். கோவையை தூய்மையாக வைத்துக்கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர்.



குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு:-

அதைத்தொடர்ந்து கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில், யங் இந்தியன்ஸ் அமைப்பின் குழந்தைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு மனிதச்சங்கிலி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர போக்குவரத்துத் துணைக் காவல் ஆணையர் சுஜித்குமார் கலந்துகொண்டு, பலூன்கள் பறக்கவிட்டு, மனிதச்சங்கிலி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இதில், யங் இந்தியன்ஸ் அமைப்பின் குழந்தைகள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் டாக்டர் பிரியதர்ஷினி, துணைத் தலைவர் நிவேதா, யங் இந்தியன்ஸ் அமைப்பின் தலைவர் பிரச்சன்னா, துணைத் தலைவர் திபேந்தர் சிங் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...