போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் பற்றிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு : போராட்டம் நீட்டிப்பு

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் பற்றிய வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், வேலைநிறுத்தம் நாளை வரை தொடரும் எனத் தெரிகிறது


கோவை, ஜனவரி 10

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் பற்றிய வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், வேலைநிறுத்தம் நாளை வரை தொடரும் எனத் தெரிகிறது. 

போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4ந்தேதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊழியர்களின் போராட்டத்தினால் பேருந்துகள் இயக்கம் குறைக்கப்பட்டு, அதனால் பொதுமக்கள் அதிக பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.  ரயில்களில் கூட்டம் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் இதுபற்றிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இடைக்காலமாக 2.44 ஊதிய உயர்வு வழங்கப்படும் எனக் கூறினார்.

பொங்கல் பண்டிகை வருவதால் பொதுமக்களுக்கு சேவை செய்ய முன்வர வேண்டும் என நீதிபதிகளும் கூறியுள்ளனர். ஆனால், அரசின் உத்தரவாதத்தினை ஏற்க தொழிற்சங்கங்கள் மறுத்து உள்ளன. தொழிற்சங்கத்தினரை அழைத்து பேச்சு நடத்த அரசு விரும்புகிறதா? இல்லையா? என்றும் தொ.மு.ச. கேள்வி எழுப்பியுள்ளது. இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் பற்றிய வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனால், போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் நாளை வரை தொடரும் எனத் தெரிகிறது. 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...