பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

கோவையில் 10-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, ஜனவரி 11

கோவையில் 10-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் ஷமீம். இவரது மகன் ஜாபர் ஜெரின் (15). இவர் ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், வழக்கம் போல் இன்று காலை பள்ளிக்குச் சென்ற ஜாபர் ஜெரினை மதியம் அவரது வீட்டுக்கு பள்ளி உதவியாளர் அழைத்து வந்து விட்டுள்ளார். 

விவரம் கேட்ட ஜாபரின் பெற்றோரிடம், பள்ளி தலைமையாசிரியரை வந்து சந்திக்கும்படி பள்ளி உதவியாளர் கூறியதாக தெரிகிறது. 

இதனிடையே, வீட்டிற்குள் புகுந்த ஜாபர் கதவை தாழிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த ரத்தினபுரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜாபரின் உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

தொடர்ந்து, மாணவன் பள்ளியில் இருந்து எதற்காக திருப்பி வீட்டிற்கு அனுப்பப்பட்டார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...