கோவை விழாவையொட்டி பம்பு செட்டுகளைக் கொண்டு பெயர் வடிவமைக்கும் நிகழ்ச்சி

கோவையில் உள்ள பம்புசெட் உற்பத்தியாளர்கள், அவர்கள் உற்பத்தி செய்த பம்புசெட்டுகளைக் கொண்டு, ‘கோயம்புத்தூர் தி பம்பு சிட்டி ஆப் ஆசியா’ என்று பெயர் வடிவமைக்கும் நிகழ்ச்சி, வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்றது.

கோவை, ஜனவரி 11

கோவையில் உள்ள பம்புசெட் உற்பத்தியாளர்கள், அவர்கள் உற்பத்தி செய்த பம்புசெட்டுகளைக் கொண்டு, ‘கோயம்புத்தூர் தி பம்பு சிட்டி ஆப் ஆசியா’ என்று பெயர் வடிவமைக்கும் நிகழ்ச்சி, வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்றது. 



கோவையில் உள்ள பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தும் 10-வது ஆண்டு கோவை விழா, கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக கோவையில் உள்ள பம்புசெட் உற்பத்தியாளர்கள், அவர்கள் உற்பத்தி செய்த பம்புசெட்டுகளைக் கொண்டு, ‘கோயம்புத்தூர் தி பம்பு சிட்டி ஆப் ஆசியா’ என்று பெயர் வடிவமைக்கும் நிகழ்ச்சி, வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்றது. 

அதில், கோவையில் உள்ள முன்னணி பம்புசெட் உற்பத்தியாளர்களான ஆக்வாடெக்ஸ் மற்றும் டெக்ஸ்மோ, எக்கி மற்றும் டெக்கான் பிராண்ட்ஸ், மகேந்திரா பம்ப்ஸ், சுகுணா பம்ப்ஸ், சி.ஆர்.ஐ. பம்ப்ஸ், ஐடியல் பம்ப்ஸ், ஓம் முருகன் இன்டஸ்டிரியல்ஸ், பி.எஸ்.ஜி. பம்ப்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய பம்புசெட்டுகளை ‘கோயம்புத்தூர் தி பம்பு சிட்டி ஆப் ஆசியா’ என்று பிரமாண்டமாக வடிவமைத்தனர். 



இது குறித்து எக்கி குரூப்ஸ் கனிகா ஆறுமுகம், ஓம் முருகன் இன்டஸ்டிரியல்ஸ் கார்த்திகேயன், மகேந்திரா பம்ப்ஸ் மிதுன் ராமதாஸ் ஆகியோர் கூறியதாவது:- ஆசிய கண்டத்தில் அதிகளவில் பம்புசெட் உற்பத்தி செய்யும் நகரமாக கோவை விளங்குகிறது. முன்னணி பம்புசெட் நிறுவனங்கள் கோவையில்தான் உள்ளன. 

தொழிற்பேட்டைகள் 

60 ஆண்டுகளுக்கு தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு கோவையில் பம்புசெட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இங்கிலாந்தில் இருந்து பம்புசெட் மாடல்கள் கொண்டுவரப்பட்டு இங்கு உற்பத்தி செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக பல்வேறு நிறுவனங்கள் தொடங்கப்பட்டு பம்புசெட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. தரமான பம்புசெட்டுகளை உருவாக்கும் சூழல் கோவையில் உள்ளது. 

200 நிறுவனங்கள் 

 

கோவையில் 200 சிறு, நடுத்தர மற்றும் பெரும் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இது நாட்டின் தேவையில் 40 சதவீதம் ஆகும். இதற்கு அடுத்தபடியாக அகமதாபாத், ராஜ்கோட் ஆகிய நகரங்களில் பம்புசெட்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலக பம்புசெட் உற்பத்தி சந்தையில், இந்தியா 10,000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்கிறது. இதில், கோவையில் பங்களிப்பு அதிகமாகும். உலக பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்து செல்வதற்கு குறைந்த செலவில் தரமான பம்புசெட்டுகளை உற்பத்தி செய்வதும் ஒரு காரணமாகும்.

உலக சந்தையில் சவால் :

இதற்கான நேர்மறையான சூழல் கோவையில் நிலவுகிறது. பொறியியல் உற்பத்தி திறன், அதிக சப்ளைக்கான வாய்ப்புகள் இங்கு உள்ளன. விவசாயத்திற்கு அதிகரித்து வரும் தேவையால், தொழில் நிறுவனங்களில் பம்புசெட் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. வருங்காலங்களில் சவால்கள் அதிகரிக்கும் என்பதால், உலக சந்தையில் போட்டியிடும் வகையில் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

நிகழ்ச்சியில் யங் இந்தியன்ஸ் தலைவர் பிரசன்னா, துணைத்தலைவர் வி~;ணு உள்பட தொழில்துறையினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

சின்னம் வடிமைக்கும் நிகழ்ச்சி



கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக பி.எஸ்.ஜி. நிறுவனங்கள் சார்பில், 9 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன்படி பி.எஸ்.ஜி. பப்ளிக் பள்ளி சார்பில் கோவை விழா சின்னம் வடிவமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் 450 மாணவ, மாணவிகள் ‘கோயம்புத்தூர் விழா’ என்று நின்று அசத்தினர். 

இன்றுடன் நிறைவு

கோவையில் கடந்த ஒருவாரமாக நடைபெற்ற கோவை விழா நாளையுடன் (12-ந் தேதி) நிறைவு பெறுகிறது. இதையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, மூத்த குடிமக்களின் யோகாசன நிகழ்ச்சி, சிலம்பாட்டம், கோயம்புத்தூர் வட்டார நாட்டுப்புற விளையாட்டுகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...