போக்குவரத்து ஸ்டிரைக் வாபஸ் : மத்தியஸ்தரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கும், அரசுக்கும் இடையிலான ஊதியப் பிரச்சனைக்கு தீர்வு காண மத்தியஸ்தரை நியமனம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்மூலம், போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது.


ஜனவரி 11

அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கும், அரசுக்கும் இடையிலான ஊதியப் பிரச்சனைக்கு தீர்வு காண மத்தியஸ்தரை நியமனம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்மூலம், போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது. 

போக்குவரத்து ஊழியர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று 8-வது நாளை எட்டியது. தமிழகம் முழுவதும் இன்று காலையில் சுமார் 60 சதவீத பேருந்துகள் இயக்கப்படாததால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமம் அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகை நேரத்தில் வேலைநிறுத்தம் நடப்பதால் பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பேருந்து வேலைநிறுத்தத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதிகள், “கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்துகளை உடனே இயக்க வேண்டும். வழக்குகளை பிறகு விரிவாக விசாரித்துக் கொள்ளலாம். எனவே இன்றிரவு முதலே பேருந்துகளை இயக்குங்கள்”என்று அறிவுறுத்தினர். பொதுமக்கள்  நலன் கருதி உயர்நீதிமன்றம் தெரிவித்த யோசனையை ஏற்க போக்குவரத்து கழக நிர்வாகிகள் தயங்கினர்.  பின்னர், இன்றைய தினத்திற்கு விசாரணையை ஒத்திவைத்தனர். 

மேலும், போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில், 3 நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அரசு அறிவித்துள்ள 2.44 மடங்கு ஊதிய உயர்வை இடைக்கால ஊதிய உயர்வாக ஏற்றுக் கொள்கிறோம். இதுபற்றி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அரசு உறுதி அளிக்க வேண்டும்.  2.44 மடங்கு ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு சரியான உறுதி மொழியைத் தர வேண்டும். இவ்வாறு 3 நிபந்தனைகள் வெளியிடப்பட்டன. ஆனால், போக்குவரத்து தொழிற்சங்கங்களின் இந்த நிபந்தனைகளை அரசு ஏற்கவில்லை. 

இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது,  தொழிற்சங்கங்கள் சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘அரசு நிர்ணயம் செய்துள்ள 2.44 காரணி ஊதிய உயர்வை இடைக்காலமாக ஏற்றுக் கொள்வதாகவும், 2.57 காரணி ஊதிய உயர்வு, இதர படிகள் தொடர்பாக ஒரு மத்தியஸ்தரை நியமித்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும், போக்குவரத்து ஊழியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். போராட்டத்தின் ஈடுபட்ட ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும். போராட்ட காலத்தில் வேலைக்கு வரவில்லை என்று சம்பளத்தை பிடித்தம் செய்யக்கூடாது’ என்று கூறியிருந்தனர். 

இந்தக் கோரிக்கையை வழக்கறிஞர் ஜெனரல் ஏற்க மறுத்தார். அதேநேரம், ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஒரு மத்தியஸ்தரை நியமிப்பது குறித்து அரசின் கருத்தை கேட்டுத் தெரிவிப்பதாக கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் விசாரணையைப் பிற்பகலுக்கு தள்ளிவைத்தனர். பின்னர், மீண்டும் நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியதும் .தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்த நடுவர் நியமிப்பது தொடர்பாக பதில் அளிக்க காலஅவகாசம் வேண்டும் என அரசு தரப்பு கேட்டது. இதனால், போக்குவரத்து ஊழியர்கள் தொடர்பான வழக்கு பிற்பகல் 2.45 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது. பேச்சு நடத்த நடுவர் நியமிப்பது தொடர்பாக அரசு தரப்பு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, அரசும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஆனால், வேலைநிறுத்த நாட்களுக்கான ஊதியம் வழங்க வேண்டும், குற்ற வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்தது. 

இதனிடையே, 0.13 காரணி ஊதிய உயர்வுதான் பிரச்சினையாக உள்ளது, இது தொடர்பாக நடுவர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனக் கூறிய நீதிபதிகள், போக்குவரத்து ஊழியர்கள் விவகாரம் தொடர்பாக பேசித் தீர்க்க ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நடுவராக நியமனம் செய்யப்படுவதாகவும், இனிமேல் போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் குறித்து பத்மநாபன் விசாரிப்பார் எனவும் கூறினர்.  

போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சினையில் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் மத்தியஸ்தராக நியமன உத்தரவையடுத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து, நீதிமன்ற தீர்ப்பை ஏற்று தற்காலிகமாக பேருந்தை இயக்க முடிவு செய்துள்ளதாக தொழிற்சங்க வழக்கறிஞர் தெரிவித்தார். மக்கள் நலன் கருதி நீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் கூறினார். 

இதைத்தொடர்ந்து 8 நாளாக நடைபெற்று வந்த போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் ஆனது. மேலும், ஊதிய உயர்வு தொடர்பான அறிக்கையை ஒரு மாதத்தில் தாக்கல் செய்ய நடுவருக்கு உத்தரவிட்டு, விசாரணை அடுத்த மாதம் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக சிபிஎம் டி.கே.ரங்கராஜன் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...