டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள்


கோவை, ஜனவரி 12

டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் சிறப்பாக பணியாற்றிய ஊர்காவலர் படை வீரர்கள் (கோவை மாநகரம்) மற்றும் இன்னர் வீல் ஆஃப் கோயம்புத்தூர் அமைப்பினருக்கு, கோவை மாநகராட்சி ஆணையர் மரு. க. விஜயகார்த்திகேயன் இன்று பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.



கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் நடைபெற்று வரும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில், கோவை மாநகராட்சியோடு இணைந்து 400 ஊர்காவலர் படை வீரர்கள் மற்றும் இன்னர் வீல் ஆஃப் கோயம்புத்தூர் அமைப்பைச் சேர்ந்த 70 தன்னார்வலர்கள் டெங்கு நோய் ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து டெங்கு நோய் பற்றிய தகவல்களை எடுத்துக் கூறி நோய் தடுப்பு நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். இதில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ்கள் மாநகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டன.



கோவை மாநகர ஊர்காவலர் படை சார்பாக தனசேகர், மாநகர ஊர்க்காவல்படையின் பிராந்திய தளபதி மற்றும் தேன்மொழி ராஜாராம், மாநகர ஊர்க்காவல்படையின் பிராந்திய துணைத் தலைவர் ஆகியோர் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.



மேலும், இன்னர் வீல் ஆஃப் கோயம்பத்தூர் அமைப்பின் தலைவர் சாந்தி ராஜசேகர், செயலாளர் பி. கஸ்தூரி வசந்தி, அமைப்பின் மேற்கு மண்டல தலைவர் அனு மெண்டா, செயலாளர் மனிஷா பாஜ்பாய், கிழக்கு மண்டலத்தின் தலைவர் மனிமேகலா. வி. ராஜ் மற்றும் செயலாளர் சாவித்ரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டு சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.



Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...