கர்நாடகாவில் மீண்டும் பரவும் பறவை காய்ச்சல்: தமிழகம் வரும் வாகனங்களுக்கு பூச்சிக் கொல்லி மருந்து அடித்த பிறகே அனுமதி

ஊட்டி, ஜனவரி 13

கர்நாடகாவில் பறவை காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதனால், கர்நாடகாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் பூச்சிக்கொல்லி மருந்து அடித்த பிறகே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றது. 

கர்நாடகாவில் தற்போது பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தப் பறவை காய்ச்சல் நோய் தமிழகத்திற்கு பரவாமல் தடுக்க கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் அனைத்து சோதனை சாவடிகளிலும் பறவை காய்ச்சல் தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.



அதன்படி, கர்நாடகா மாநிலம் மைசூர், பெங்களூர் பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டம் கக்கநள்ளா சோதனை சாவடி வழியாக தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும், தமிழக கால்நடைத்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் கர்நாடகாவில் இருந்து கோழி உட்பட பறவைகளை கொண்டு வர தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாகப் பறவை காய்ச்சல் நோய் தமிழகத்திற்கு பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...