வறட்சியிலும் சிறு மலர்ச்சியில் பொங்கல் கொண்டாடிய விவசாயிகள்


கோவை ஜனவரி 14

கடந்த ஆண்டு 130 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் மிகப்பெரிய வறட்சி ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தென்னை, மக்காச்சோளம், காய்கறிகள், மாட்டு தீவனங்கள் போன்றவை அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகின்றன்.

இந்த ஆண்டு வறட்சியிலும் சிறு மலர்ச்சி போல் இரண்டு மாதங்கள் பெய்த மழையினால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட  விவசாயிகள் சற்று மிகிழ்ச்சியாகவே பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்கள்.

"பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு சற்று ஆறுதலாகதான் அமைந்தது. இந்த திருநாளில் இயற்கை அன்னை என்றும் மழை பொழிய விவசாயிகளுக்கு ஆதரவாக என்றும் இருக்க வேண்டும் என கேட்டுகொள்கிறேன்",என கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தின் செயல் தலைவர் என்.எஸ்.பி. வெற்றி தெரிவித்தார்.

சென்ற ஆண்டு கரும்பு ஒரு ஜோடி சுமார் ரூபாய் 80 விற்ற நிலையில் இந்த ஆண்டு சுமார் ரூபாய் 100 வரை விற்கப்படுகிறது மேலும் கரும்பு வரத்தும் அதிகமாக காணப்பட்டதால் கரும்பு வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...