நீலகிரிக்குட்பட்ட சாண்டிநல்லா, காமராஜசாகர் பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை

நீலகிரியில், செம்மறி ஆடுகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதால் சாண்டிநல்லா, காமராஜசாகர் பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, ஜனவரி 15

நீலகிரியில், செம்மறி ஆடுகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதால் சாண்டிநல்லா, காமராஜசாகர் பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.



நீலகிரி செம்மறி ஆடு தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் காணப்படும் இனமாகும். நீலகிரி மலைப் பகுதிகளில் இனப்பெருக்கம் ஆனவை. மேலும், இவை அவற்றிலிருந்து கிடைக்கும் தரமான கம்பளிக்காக அறியப்படுகின்றன.

செம்மறி ஆடுகள் மேய்ச்சல் மட்டுமே அவற்றின் வாழ்வின் முக்கிய அம்சமாகும். நீலகிரி மாவட்டத்தில் குறைந்து வரும் மேய்ச்சல் நிலங்களால், இந்த அரிய ஆடு இனம் அழிவின் விளிம்பை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

இந்த ஆடுகளை அழிவிலிருந்து காக்க தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உதகை அருகேயுள்ள சாண்டிநல்லா பகுதியில் ஆடு இனவிருத்தி ஆய்வு மையம் அமைக்கப்பட்டது. 50 ஆண்டுகள் கடந்த இந்த ஆய்வு மையத்தில் நீலகிரி செம்மறி ஆடுகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த ஆய்வு மையம் அமைந்துள்ள வென்லாக் டவுன்ஸ் பகுதியில் 1200 ஏக்கர் மேய்ச்சல் நிலம் இருந்தது. தற்போது அது 700 ஏக்கராகக் குறைந்து விட்டது. நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆய்வு மையத்தில் சுமார் 1200 செம்மறி ஆடுகள் உள்ளன. மேய்ச்சல் நிலங்கள் குறைந்து வருவதால், நீலகிரி செம்மறி ஆடுகள் அழிவின் விளம்பில் உள்ளன.

இந்நிலையில், வென்லாக் டவுன்ஸ் பகுதியில் மின்வாரியத்துக்குச் சொந்தமான இடம் காமராஜ் சாகர் அணையை ஒட்டியுள்ளது. இந்த இடம் பல ஆண்டுகளாக சுற்றுலா தலமாக இருந்து வந்தது. மேலும், இப்பகுதியில் சிலர் குதிரைகளையும் சவாரிக்கு பயன்படுத்தி வந்தனர். 

இதனிடையே, இந்த குதிரைகள் மூலம் செம்மறி ஆடுகளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், இப்பகுதியில் குதிரை சவாரி மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஆடு இனவிருத்தி ஆய்வு மைய தலைவர் பேராசிரியர் ஆர். அனில்குமார் கூறுகையில், '9-வது மைல் சூட்டிங் மட்டம் பகுதியில் குதிரைகள் சவாரிக்காக பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், இப்பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்ட செம்மறி ஆடுகளுக்கு ஃபுட் ராட் மற்றும் இதர நோய் தாக்குதல் ஏற்பட்டன. இதுகுறித்து ஆய்வு செய்த போது, மேய்ச்சல் நிலத்தில் குதிரைகள் கால்களால் புல்தரையை தோண்டி, அந்த குழிகளில் மழை நீர் நிரம்பி தொற்று நோய் கிருமிகள் உற்பத்தியாகியுள்ளது தெரியவந்தது. இதன் மூலம் அங்கு மேய்ச்சலில் ஈடுபடும் ஆடுகளுக்கு நோய் தொற்று பரவியுள்ளது. 

இதனால், அப்பகுதியில் குதிரைகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...