"ரஜினிகாந்தும், கமலஹாசனும் பகல்கனவு காண்கிறார்கள்"- தங்க தமிழ்செல்வன்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் இன்று மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

கோவை, ஜனவரி 17

அப்போது அவர் கூறுகையில், இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவது பற்றிய வழக்கு நிலுவையில் உள்ளதால் வர இருக்கும் தேர்தல்களை எதிர்கொள்ள வசதியாக தமிழகம் முழுவதும் ஒரே சின்னத்தை பயன்படுத்தும் வகையில் புதிய கட்சி துவங்குவது குறித்து தினகரன் ஆலோசித்து வருகிறார். கூடிய விரைவில் முறையான அறிவிப்பு வரலாம்.

புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்கள் பிரச்சனை மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டங்களில் கலந்து கொள்ளாத நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் பகல் கனவு காண்கிறார்கள்.

ஹஜ் பயணிகளுக்கான மானியத்தைத் தொடர்ந்து மத்திய அரசு வழங்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...