புற்றுநோய் சிகிச்சைக்கு இனி சென்னை செல்ல தேவையில்லை: கோவை அரசு மருத்துவமனையிலேயே புற்றுநோய் மையம் தொடக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இன்று மண்டல புற்றுநோய் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை, ஜனவரி 17

கோவை அரசு மருத்துவமனையில் இன்று மண்டல புற்றுநோய் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இம்மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைத் துறை செயல்பட்டு வருகிறது. இங்கு 40-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை தினங்களில் நாள் ஒன்றுக்கு 100-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்

வாரந்தோறும் திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வெளி நோயாளிகளுக்கான புற்றுநோய் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறைக்கு பிரத்தியேகமாக மண்டல புற்றுநோய் மையம் கோவை அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. 



இது குறித்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புற்றுநோய் துறையின் தலைவர் டாக்டர். ஏ. சுரேஷ் வெங்கடாச்சலம் சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:-

கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைப்படி மதுரை மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

தலா ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்ட இந்த திட்டத்தின் முதற்கட்டமாகக் கோவை அரசு மருத்துவமனையில் ரூ.5 கோடி செலவில் புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறைக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தை இன்று காலை அரசு மருத்துவமனையின் முதல்வர் டாக்டர். அசோகன் திறந்து வைத்தார். 

இதில் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட மருத்துவ இயந்திரங்கள், ஸ்கேன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட உள்ளன.

நாளை முதல் வெளி நோயாளிகள் பிரிவு புதிய கட்டிடத்தில் நடைபெறும். இங்கு மாணவர்களுக்கான கருத்தரங்க கூடம் மற்றும் அறுவை சிகிச்சை கூடம் ஒன்றும் உள்ளது. படிப்படியாக ஒவ்வொரு வசதியாக அந்த கட்டிடத்தில் மேற்கொள்ளப்படும்.

கோவை மட்டுமல்லாது தமிழகத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நீலகிரி, திருப்பூர், கரூர் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

இன்னும் 6 மாத காலத்தில் மருத்துவ உபகரணங்கள் அனைத்தையும் பெற்று இந்த துறை மிகச்சிறப்பாக செயல்படும். இனி புற்றுநோய் அறுவை சிகிச்சையை கோவை அரசு மருத்துவமனையிலேயே செய்து கொள்ள இந்தத் துறை உதவிகரமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...