வீரமணியின் தலைக்கு பரிசு அறிவித்த சக்திசேனா இந்துமக்கள் இயக்கத் தலைவர் : நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்

வீரமணியின் தலையை எடுப்பவர்களுக்கு பரிசளிக்கப்படும் என்று கூறிய சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தின் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையரிடம் திராவிடர் கழகத்தினர் இன்று புகார் அளித்தனர்.

கோவை, ஜனவரி 17

திராவிடர் கழகத்தின் தலைவர் கீ.வீரமணி அண்மையில் இராமாயணத்தையும், பகவத்கீதையையும், தீயிலிட்டு எரிப்பதற்கு நாள் குறிப்போம் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. வீரமணியின் அறிக்கையை தொடர்ந்து, அவரது தலையை எடுப்பவர்களுக்கு பரிசளிக்கப்படும் என்று சக்திசேனா இந்து மக்கள் இயக்கதின் நிறுவனத்தலைவர் அன்புமாரி துண்டறிக்கை மற்றும் போஸ்டர் வாயிலாக மிரட்டல் விடுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து, கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம், அன்புமாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி திராவிடர் கழகத்தினர் புகார் மனு அளித்தனர். ஏற்கனவே இந்து தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் அன்புமாரி மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காத தைரியத்தில், தற்போது மிரட்டல் விடுத்து இருப்பதாகவும், உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் திராவிடர் கழகத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...