ஹஜ் மானியத்தை ரத்து செய்த மத்திய அரசைக் கண்டித்து கோவை, நீலகிரியில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

ஹஜ் மானியத்தை ரத்து செய்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை, ஜனவரி 18

ஹஜ் மானியத்தை ரத்து செய்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இஸ்லாமிய மக்கள் ஹஜ் புனித யாத்திரை செல்வதற்காக வழங்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்த மத்திய அரசைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் அக்கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மத்திய பாஜக அரசிற்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் குமரி ஆனந்தன் பேசுகையில், காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஹஜ் மானியத்தை மதவாத பாஜக அரசு ரத்து செய்திருப்பது சரியானது அல்ல. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் மோடி அரசின் செயல்பாடு மோசமானது. ஹஜ் மானியத்தை திரும்ப வழங்க வேண்டும். இந்த நடவடிக்கைக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நீலகிரி:-

இதேப்போன்று நீலகிரி மாவட்டம், உதகை ஏடிசி திடலிலும் காங்கிரஸ் கட்சியினரால் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில், மத்திய மதவாத பாஜக அரசு இஸ்லாமியர்கள் மீது அடக்குமுறையினை கையாண்டு வருவதாகவும், இந்த முடிவை பரிசீலனை செய்து மீண்டும் ஹஜ் பயண மானியம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. மேலும், இந்த மானியத்தை வழங்காமல் இருந்தால் நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...