அவினாசி சாலையில் கூடுதலாக 4 சிக்னல்கள் அமைக்க முடிவு : போக்குவரத்து துணை ஆணையர் தகவல்

அவினாசி சாலையில் கூடுதலாக 4 சிக்னல்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை, ஜனவரி 18

அவினாசி சாலையில் கூடுதலாக 4 சிக்னல்கள் அமைக்க முடிவு  செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகரின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் அவினாசி சாலை முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. 

இந்த சாலையில், ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 

இதனால், நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் அவினாசி சாலையில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 

அதே நேரத்தில், விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. அவினாசி சாலை சித்ரா சிக்னலுக்குப் பிறகு சின்னியம்பாளையம் பகுதியில் தான் சிக்னல் உள்ளது. இதற்கு இடைப்பட்ட தூரத்தில் விபத்துக்கள் அதிகமாக நிகழ்வதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில், அப்பகுதியில் புதிய சிக்னல்கள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டது. 

இது குறித்து மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமார் கூறுகையில், "அவினாசி சாலையில் ஆய்வு மேற்கொண்ட போது சின்னியம்பாளையம் பகுதி அருகே அதிக விபத்துக்கள் நடப்பது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து, சித்ரா பகுதியில் இருந்து சின்னியம்பாளையம் பகுதிவரை புதிதாக நான்கு சிக்னல்கள் வரை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கூடிய விரைவில் புதிய சிக்னல்கள் அமைப்பதற்கான பணிகள் நடைபெறும். மேலும், பேரிகார்டுகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்ட அறிவுறுத்தியுள்ளோம். இதனால் 300 மீட்டர்களுக்கு அப்பால் வரும் வாகன ஓட்டிகளுக்கும் பேரிகார்டு இருப்பது தெரியும்" என்றார்.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...